ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மதம் மாறி திருமணம் செய்து கொண்ட 2 நடிகைகள்.. இந்து பெண்ணாகவே மாறிய நயன்தாரா

காதலுக்கு ஜாதி, மதம் போன்ற எதுவும் கிடையாது. எம்மதமும் சம்மதம் என்று நிரூபிக்கும் வகையில் பல்வேறு திருமணங்களை நாம் பார்த்துள்ளோம். அதில் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் தங்கள் காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்துகொண்ட கதைகளும் உண்டு.

அந்த வகையில் 80 காலகட்ட தமிழ் சினிமாவை ஆட்சி செய்த சில நடிகைகளில் நடிகை குஷ்புவும் ஒருவர். இவருக்காக கோவில் கட்டும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களும் அப்போது இருந்தனர். அப்படி ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முஸ்லிம் மதத்தை சேர்ந்த குஷ்பு தன் காதலுக்காக மதம் மாறி சுந்தர் சியை கரம்பிடித்தார். அதன் பிறகு அவர் இன்றுவரை இந்து மதத்தை தான் பின்பற்றி வருகிறார். திருமணம் ஆகி பல வருடங்கள் கழிந்த பிறகும் இவர்களின் காதலும், அன்பும் இன்றும் அப்படியேதான் இருக்கிறது. இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

இவரைப் போலவே சில வருடங்களுக்கு முன்பு வரை சினிமாவில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்த ஜோதிகா தன் காதலுக்காக மதம் மாறினார். இவரின் அம்மா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர், அப்பா பஞ்சாபைச் சேர்ந்தவர்.

இதனால் முஸ்லிம் பெண்ணாக வளர்ந்த ஜோதிகா பிரபல நடிகர் சூர்யாவை காதலித்தார். இந்த காதலுக்கு முதலில் சூர்யாவின் தந்தை சிவக்குமார் சம்மதிக்கவில்லை. அதன் பிறகு சில பல பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தற்போது ஜோதிகா இந்த பெண்ணாகவே மாறி விட்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்தார்.

காதல் ஜோடிகளாக திரிந்து வந்த இவர்கள் இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதற்கு முன்பாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்துவாக மாறினார். ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நடைபெறாமல் போனது.

ஆனால் அதன் பிறகு நயன்தாரா இந்துக் கோவில்களுக்கும் சென்று வந்தார். தற்போது விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்த பிறகு அவர் பல கோவில்களுக்கு அவருடன் சென்றார். சமீபத்தில்கூட நயன்தாரா, விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்த புகைப்படம் வைரல் ஆனது. அந்த வரிசையில் இன்று தன் காதலரை கரம்பிடித்துள்ள நயன்தாரா தமிழ்நாட்டின் மருமகளாக மாறியிருக்கிறார்.

Trending News