திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புருஷனை நம்பி பிரயோஜனமில்ல.. குடும்பத்தை மறந்து பிசியான நயன்தாரா, இவ்ளோ படங்களா?

Actress Nayanthara: கொடிகட்டி பறந்த ஹீரோயின்கள் கூட திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ரோலுக்கு தள்ளப்படுவார்கள். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தன் காதலர் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்ட பிறகு இவர் அடுத்தடுத்த சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் இப்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கிறார்.

அதிலும் ஷாருக்கானுடன் இவர் நடித்திருக்கும் ஜவான் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இவர் பாலிவுட்டிலும் வெற்றி கொடியை நடுவதற்கு தயாராகி விட்டார். இதற்கு இடையில் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என இருந்த நயன்தாரா இப்போது அவர்களை மறக்கும் அளவுக்கு பிசியாகிவிட்டாராம்.

Also read: லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் யூடியூபர்.. இணையத்தை கலக்கும் அடுத்த பட அப்டேட்

அந்த வகையில் ஜவான் படத்தை தொடர்ந்து இறைவன், டெஸ்ட், லேடி சூப்பர் ஸ்டார் 75, NT 81 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் யூடியூபர் Dude Vicky இயக்க இருக்கும் படத்திலும் கமிட் ஆகியுள்ளாராம். அடுத்த வாரத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் ஆரம்பிக்க இருக்கின்றனர்.

இப்படி தன்னை தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தையும் மறுக்காமல் ஒப்புக்கொள்ளும் நயன் அதற்காக குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் ஆக வாங்கி பெட்டியை நிரப்பி கொள்கிறாராம். இப்படி இவர் கண்ட மேனிக்கு படங்களில் நடித்து தள்ளுவது பலருக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

Also read: வளர்ந்த உடன் அடாவடி காட்டும் 5 நடிகைகள்.. இவர் அம்மாவை பார்க்க கூட நேரமில்லையாம் படு பிஸியாக இருக்கும் வாரிசு பட நடிகை.

ஆனால் திருமணத்திற்கு பிறகு இன்னும் எந்த படங்களையும் இயக்காமல் இருக்கும் புருஷனை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு நயன் வந்து விட்டாராம். ஏற்கனவே அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதை அடுத்து அவர் இப்போது வரை எந்த பட அறிவிப்பையும் வெளியிடவில்லை. பிரதீப் ரங்கநாதனை இவர் இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டு வந்தாலும் அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. அந்த வகையில் விக்னேஷ் சிவன் இப்போது மனைவி, குழந்தைகளை கவனித்துக் கொண்டு பொழுதை போக்கி வருகிறார். இதன் காரணமாகவே நயன்தாரா இப்போது குடும்பத்தை மறந்து பிஸியாகி இருக்கிறார்.

Also read: தத்ரூபமாக அம்மனாக காட்சியளித்த 5 நடிகைகள்.. சாமினா இப்படித்தான் இருப்பாங்க என நம்ப வைத்த நீலாம்பரி

Trending News