வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி, விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா.. பணத்தாசையால் ஷாரூக்கானிடம் சரண்டர்!

நடிகை நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவில் பயங்கர பிசியான நடிகையாக வலம் வந்தார். பல நடிகைகளும் பொறாமைப்படும் அளவிற்கு, மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு சினிமாவை விட்டு விலகும் அளவிற்கு நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. கால்ஷீட் இல்லாத ஒரே காரணத்தால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கூட நயன்தாரா தவிர்த்து இருக்கிறார்.

மேலும் ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று வேறு அழைக்கப்பட்டார். இது போன்ற வெற்றிகள் நயன்தாராவிற்கு தன்னம்பிக்கையை கொடுத்ததா அல்லது தலைக்கனத்தை கொடுத்ததா என்று தெரியவில்லை. அவரும் கொஞ்சம் ஓவராக தான் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் நடந்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். பணம் போட்டு படம் எடுப்பவர்கள் கூப்பிட்டால் கூட பிஸி என்று மறுத்துவிடுவார்.

Also Read:சிம்பு நயன்தாரா பற்றிய ரகசியத்தை உளறிய இயக்குனர்.. பட புரமோஷனுக்காக போட்டுக்கொடுத்த பரிதாபம்

ஒரு பேட்டியின் போது நீங்கள் ஏன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று கேட்டதற்கு, நான் அந்த விழாக்களில் சென்று படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு கடைசியில் படம் நன்றாக அமையவில்லை என்றால் என்ன செய்வது, அதனால் தான் நான் கலந்து கொள்வதில்லை என்று ரொம்பவும் கூலாக பதில் அளித்தார். இது பல தயாரிப்பாளர்களுக்கு வயிற்று எரிச்சலை கிளப்பியது என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் படங்களில் நடித்தால் கூட இவர் அந்த பிரமோஷன்களுக்கு செல்ல மாட்டார். மேலும் படத்திற்கு ஒப்பந்தம் போடும்போதே இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தான் கையெழுத்து போடுவாராம் நயன்தாரா. இப்படியெல்லாம் அலட்டிக் கொண்டு தெரிந்த நயன்தாராக்கு கடந்த ஒரு வருடங்களாக சினிமா கேரியர் சருக்கலில் இருக்கிறது.

Also Read:ஒன்றாக வசித்து வந்தபோது பிரபுதேவா சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. இதனால்தான் நயன்தாரா பிரிந்து சென்றாராம்!

எந்தப் பட வாய்ப்புகளும் இல்லாமல் ஜவான் படத்தை மட்டுமே இரு நம்பி இருந்த நயன்தாரா சமீபத்தில் தான் சித்தார்த் நடிக்கும் படத்தில் கமிட் ஆனார். முன்னணி ஹீரோக்கள் யாரும் இவரை தேடுவதாகவும் இல்லை. இதனால் தன்னுடைய மிகப்பெரிய கொள்கையை தளர்த்தி இருக்கிறார் நயன். பல வருடங்களாக பிரமோஷன் விழாக்களின் பக்கமே செல்லாத நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

பணத்திற்காக மொத்த கொள்கையும் தளர்த்தி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார். அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட நயன்தாரா தற்போது இது போன்ற முடிவை எடுத்திருக்கிறார். எப்படி இருந்தால் என்ன பணம் சம்பாதித்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இதையெல்லாம் செய்து வருகிறார். ஜவான் பட பிரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதற்காக இவர் தற்போது மும்பை சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:அதுக்கு 8 கோடி வேண்டும்.. பகீர் கிளப்பிய நயன்தாரா

Trending News