ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

9 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி.. சர்ப்ரைஸாக வெளிவந்த நயன்தாராவின் 75வது பட அறிவிப்பு

திருமணம் ஆனாலே சிலருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்துவிடும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கோ அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இதை இளம் நடிகைகளே சற்று பொறாமையோடு தான் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இந்நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர் ஒரு இளம் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நயன்தாரா, ஜெய்யின் ஜோடி பொருத்தம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. அந்த க்யூட்டான ஜோடி தான் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

Also read: செல்லும் இடமெல்லாம் விரட்டிய நபர்கள்.. மூக்குத்தி அம்மனாக மாறி முகம் சிவந்த நயன்தாரா

நயன்தாரா நடிக்கும் 75 ஆவது திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் மற்றொரு சர்ப்ரைஸும் இருக்கிறது. என்னவென்றால் இன்று ஜெய்யின் பிறந்தநாள்.

அதற்கான ஒரு ட்ரீட்டாகவும் இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த ஜெய் இடையில் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றி படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் வில்லனாக கூட அவர் ஒரு திரைப்படத்தில் நடித்துப் பார்த்தார்.

Also read: குலதெய்வத்திடம் அடைக்கலமான மூக்குத்தி அம்மன்.. பிரச்சனை மேல் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நயன்-விக்கி

அதுவும் ஒர்க் அவுட் ஆகாத நிலையில் கடைசியாக வெளிவந்த காபி வித் காதல் திரைப்படமும் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இப்படி தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்தவருக்கு நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் அறிவிப்பே ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறிருக்கிறது.

nayanthara-jai-movie
nayanthara-jai-movie

மேலும் ஜெய்க்கு இந்த திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.

Also read: குழந்தைகளின் பெயரை அறிவித்த விக்கி-நயன்.. எல்லாத்திலும் வித்தியாசம் காட்டும் ஜோடி

Trending News