வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திருமணத்திற்கு பிறகு தத்தளிக்கும் நயன்தாராவின் மார்க்கெட்.. சோலியை முடித்துவிட்ட 2 படங்கள்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தன் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இப்போது தான் இந்த பஞ்சாயத்து ஓய்ந்து இருக்கிறது. மேலும் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா கணவருடன் ஹனிமூன், வெளிநாடு என்று பிசியாக இருந்த நிலையில் இனிமேல் இவர் படத்தில் நடிக்க மாட்டார் என்றும் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார் என்றும் தகவல்கள் வெளியானது.

Also read: பல கோடிகளில் சம்பளம் வாங்கும் 6 டாப் ஹீரோயின்கள்.. கல்யாணம், குழந்தைக்கு பின்னும் எட்ட முடியாத உயரத்தில் நயன்தாரா

ஆனால் அது உண்மை இல்லை என்று சொல்லும் வகையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கனெக்ட் படத்தின் டிரைலர் அவருடைய பிறந்தநாள் அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் உருவான கோல்ட் திரைப்படத்திற்கும் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

பிரேமம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் 7 வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நயன்தாராவும் இரண்டு வருடங்களுக்கு பின் மலையாள திரைப்படத்தில் நடிக்கிறார்.

Also read: உருமாறிப்போன பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ்.. இந்த ஒரே பிரச்சனையால் 7 வருடம் முடங்கிக் கிடந்த சோகம்

இதனாலேயே இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை தவறவில்லை. மேலும் நயன்தாராவின் கதாபாத்திரமும் ஏமாற்றத்தை கொடுத்து விட்டது என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது.

ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இவர் நடித்திருந்த காட்ஃபாதர் திரைப்படமும் பெரிய அளவில் வசூல் லாபம் பெறவில்லை. அதனால் நொந்து போயிருந்த நயன்தாராவுக்கு கோல்ட் திரைப்படமும் ஆப்பு வைத்திருக்கிறது. இதன் மூலம் இரண்டு இயக்குனர்களும் அவரின் மார்க்கெட்டை இறக்கி இருக்கின்றனர். அதனால் நயன்தாரா இனிமேல் கொஞ்சம் சுதாரித்து கொள்ளும் முடிவில் இருக்கிறாராம்.

Also read: பாப் கட்டிங், ட்ரெண்டாகும் நயன்தாராவின் பள்ளிப்பருவ புகைப்படம்.. அழகுல மயங்கி விக்னேஷ் சிவன்

Trending News