ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நயன்தாராவின் அடுத்த 5 பிரம்மாண்ட படங்கள்.. ரெட்டை குழந்தைக்கு தாயாகியும் மார்க்கெட் குறையல

ஒரு ஹீரோக்கு இணையாக பெரும் புகழும் வாங்கிக் கொண்டு அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்ட நடிகை என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும்தான். அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையைத் தேர்ந்தெடுத்து ஹீரோவே இல்லாமல் ஹீரோயின் சப்ஜெக்ட் கதையில் நடித்து வெற்றி பெற்று வருகிறார்.

இப்படி பிசியாக இருந்த நயன்தாரா திருமணத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை. அதனால் இதுவரை நம்பர் ஒன் இடத்தில் இருந்து சற்று பின்னுக்குப் போய்விட்டார். ஆனாலும் அந்த இடத்திற்கு மறுபடியும் வரவேண்டும் என்று சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதற்காக ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

Also read: என்ன விட ராங்கியா இருப்பா போல.. விக்னேஷ் சிவனிடமே நயன்தாராவை பற்றி ஒத்து ஊதிய நடிகை

அதனால் இனி வெளிவரும் படங்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதற்கு காரணம் தற்போது வருகிற நடிகைகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் நடிகைகள் இவருடைய இடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அந்த இடம் நம்மை விட்டு போய் விடுமோ என்று பயத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனருடன் மட்டும் கூட்டணி வைத்திருக்கிறார்.

அடுத்தடுத்து இவருக்கு இருக்கும் பிரம்மாண்ட படங்கள் என்னவென்று பார்க்கலாம். இதுவரை பாலிவுட் பக்கமே போகாமல் இருந்த நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் இவர் நடிக்கும் முதல் படம் என்பதால் ஷாருக்கான் ரசிகர்கள் மற்றும் இவருடைய ரசிகர்கள் ஆவலாக இப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: முதலில் கஜானாவை மொத்தமாக காலி செய்த அட்லீ.. ஜவானுக்கு கல்லா கட்ட நாள் குறித்த ஷாருக்கான்

அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் அகமது இயக்குகிறார். இப்படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. அடுத்ததாக இயக்குனர் எஸ் சசிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என்ற படத்தில் நடிகர் மாதவன் மற்றும் சித்தார்த் அவர்களுடன் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

இதனை அடுத்து நயன்தாராவின் 75வது படத்தை இயக்குனர் நீிலேஷ் என்பவர் இயக்கி அதில் ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கிறார்கள். பின்பு தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவி உடன் மறுபடியும் ஜோடி சேருகிறார். இப்படத்தையும் மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இப்படி தொடர்ந்து மிக பிரம்மாண்ட படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இவருடைய ரசிகர்கள் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

Also read: மனைவி பேச்சு மந்திரம் என வாழும் 5 கணவன்மார்கள்.. நயன்தாரா பேச்சை தட்டாத விக்னேஷ் சிவன்

Trending News