வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சர்ச்சையை கிளப்பிய நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம்.. சுடச்சுட வெளிவந்த அறிக்கை

சர்ச்சை ராணியாக இருக்கும் நயன்தாரா திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவானது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாடகைதாய் மூலம் குழந்தை பெற்ற நயன், விக்கி ஜோடிக்கு எதிராக சட்ட ரீதியான சிக்கல்களும் எழுந்தது. இதில் நயன்தாரா விதிகளை மீறி தான் குழந்தையை பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

இதை அடுத்து நடந்த விசாரணையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தங்களுக்கு பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி அதற்கான சமர்ப்பித்தனர். மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் தெரிவித்தனர். அதற்கான சான்றிதழ்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டது.

Also read:நயன்தாராவை பார்த்து ஏங்கும் நடிகை.. கெடச்சா அப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கணும்

அதைத்தொடர்ந்து இதை விசாரிக்க மருத்துவம் மற்றும் ஊரக சேவை நல பணிகள் இயக்க இணை இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் நயன்தாரா தரப்பில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.

அதில் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வாடகை தாய் தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்கள் சரியாக கடைபிடித்துள்ளதாகவும், அந்த வாடகை தாய்க்கு ஏற்கனவே ஒரு குழந்தை உயிருடன் இருப்பதும் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறது.

Also read:என்னது நயன்தாராவுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லையா? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட டாக்டர்

அது மட்டுமல்லாமல் குழந்தைகள் பிறந்த பிரபல மருத்துவமனைகயிலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அதில் வழங்கப்பட்ட ஆவணங்களும் பதிவுத்துறையால் சரி பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு சிகிச்சை அளித்த நயன்தாராவின் குடும்ப மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அந்த வகையில் பல நாட்களாக நயன்தாராவை சுற்றி இருந்த இந்த வாடகை தாய் சர்ச்சை தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. விக்கி, நயன் தம்பதிகளின் மேல் எந்த தவறும் இல்லை. அவர்கள் முறையான விதிமுறைகளை பின்பற்றி தான் குழந்தைகளை பெற்றுள்ளனர் என்று வெளிவந்துள்ள இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

Also read:தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி.. நயன்தாராக்கு டஃப் கொடுப்பாங்க போல

Trending News