3 மாதத்தில் 50 கோடிக்கு பிளான் போட்ட நயன்தாரா.. அட்வான்ஸ் மட்டுமே பல கோடிகள் வந்திருக்கிறதாம்!

வயதானதும் மார்க்கெட் போன நடிகைகள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் வயது ஆக ஆக மார்க்கெட் ஒரு சில நடிகைகளுக்கு தான் அதிகமாகும். அதில் பாலிவுட் நடிகைகளுக்கு எப்போதுமே முதலிடம் தான்.

ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் 37 வயது ஆகியிருக்கும் நிலையிலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

வயது ஆக ஆக இவருக்கு சம்பளமும் எக்கச்சக்கமாக கூடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கோடிகளில்தான். இந்த ஊரடங்கு சமயத்தில் பலரும் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் நயன்தாராவுக்கு மட்டும் பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்து வருகிறதாம்.

தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டதட்ட பத்து படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகியுள்ளாராம் நயன்தாரா.

nayanthara-cinemapettai-02
nayanthara-cinemapettai-02

அவருடைய மொத்த சம்பளத்தை கணக்கு போட்டால் 50 கோடியை தாண்டும் என்கிறார்கள். அட்வான்ஸ் மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடியை வாங்கி பைக்குள் போட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் வேறு தொடங்கிவிட்டார்.

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக நெற்றிக்கண் என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.