வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் சேதுபதியை மிஞ்சும் நயன்தாரா.. கொட்டும் பண மழையால் பயத்தில் விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டாராக கோலிவுட்டில் பட்டையைக் கிளப்பி வருகிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நயன்தாரா இதைத்தவிர நெற்றிக்கண், அண்ணாத்த, ஆரடுகுல புல்லட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து உள்ளார். இப்படி அடுக்கடுக்காக கடந்த 2 மாதங்களில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது மட்டுமில்லாமல் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் சில தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான கமிட்மென்ட் கொடுத்து உள்ளாராம்.

இதை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது கிட்டத்தட்ட 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். படத்தின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது விஜய் சேதுபதியை விட நயன்தாரா அதிகமான படங்களில் நடித்து வருகிறாராம்.

அட்வான்ஸ் தொகை மட்டும் கிட்டத்தட்ட 20 கோடி வரை பெற்றுள்ளார். இப்படி ஒருபுறம் படம் பணம் கொட்டினாலும் மறு புறம் எப்போது திருமணம் என்று கேள்வி வைக்கப்பட்டு தான் வருகிறது.

படத்தின் கமிட்மென்ட் அதிகமாக இருப்பதால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கான திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. இதனால் விக்னேஷ் சிவனுக்கு பயம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம், விரைவில் திருமணம் செய்து கொண்டு அதற்குப் பின் படங்களில் நடிக்கலாமே என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.

kaathuvakula-rendu-kaadhal
kaathuvakula-rendu-kaadhal

Trending News