ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சிறு வயதில் தொலைந்துபோன நீலிமா ராணி.. அதிர்ச்சி சம்பவத்தை அசால்டாக சொல்றீங்களேமா!

சீரியல் நடிகைகளில் அன்றும் இன்றும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தான் நீலிமா ராணி. வில்லத்தனமாக இருந்தாலும், குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்துக் கொடுப்பார்.

சொந்தத் தொழில் தொடங்கி உள்ளதால் பெரும்பாலும் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட தவறுவதில்லை.

அதேபோல் தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். இன்றைய தேதிக்கு யூடியூப் சேனல்களில் பந்தா காட்டாமல் கேட்டவுடன் பேட்டி கொடுக்கும் நடிகை என்றால் இவர் ஒருவர்தானாம்.

இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் நல்ல பெயர் வாங்கி வைத்திருக்கும் நீலிமா ராணி நடுரோட்டில் வெறும் டிரவுசருடன் நடந்து போனதைப் பற்றி சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அடிப்படையில் ஆந்திரா பெண்ணான நீலிமா ராணி விசாகப்பட்டினத்தில் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.

அவருடைய தந்தை வீட்டின் அருகிலேயே எலெக்ட்ரானிக் கடை வைத்திருந்தாராம். அப்படி ஒரு முறை வீட்டிலிருந்து தந்தையை பார்ப்பதற்காக தன்னுடைய மூன்று வயதில் வெறும் உள்ளாடையுடன் நடந்து சென்றுள்ளார்.

அப்போது பிள்ளையை காணோம் என பலரும் பதறி விட்டார்களாம். எதேர்ச்சையாக வண்டியில் வந்த அவரது தந்தை அவரை பார்த்து கண்டுபிடித்ததாக கூறி சமீபத்திய தந்தையர் தினத்தில் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கண்ணீர் விட்டுள்ளார்.

neelima-rani-cinemapettai
neelima-rani-cinemapettai

Trending News