திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஒரு நைட்டுக்கு என்ன ரேட்டு? எனக் கேட்ட ரசிகர்.. செருப்படி பதில் கொடுத்த நீலிமா ராணி

கடந்த சில வருடங்களாக சமூக வலைதளங்களில் நேரடியாக பிரபலங்களிடம் வரம்பு மீறி இரட்டை அர்த்தங்களிலும், ஆபாசமாகவும் தாக்கி பேசுவதை பார்த்து வருகிறோம். அதற்கு பல நடிகைகள் திருப்பி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஏன் முன்னணி நடிகையாக இருந்து இன்று அரசியலில் இருக்கும் பல முன்னாள் நடிகைகளுக்கும் இந்த மாதிரி நடந்துள்ளது. சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் ரசிகர்கள் இணையதளங்களில் கொச்சையான பதிவுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சீரியல் மற்றும் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நீலிமா ராணியை பார்த்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொச்சையான கேள்வி கேட்டதற்கு, நெத்தியடி பதில் கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபலங்களுக்கு போரடித்தால் ரசிகர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். பெரும்பாலும் அது சமூக வலைத் தளத்தின் வாயிலாக தான் இருக்கும். சமீபகாலமாக அனைத்து பிரபலங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் அதிகம் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்? என்ற பகுதியின் மூலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் நீலிமா ராணி.

அப்போது ஒரு ரசிகர், ஒரு இரவுக்கு என்ன ரேட்? என கொச்சையாக கேட்டுள்ளார். அதைப் பார்த்து டென்ஷன் ஆகாமல் கூலாக நீலிமா ராணி, நான் டீசண்டான சகோதரர்களை எதிர்பார்க்கிறேன் எனவும், உங்களை மாதிரி ஆட்கள் நேரடியாக சைக்காலஜிஸ்ட் மருத்துவரை அணுகினால் நல்லது என அமைதியாக பதிலடி கொடுத்துள்ளார்.

neelima-news
neelima-news

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் ரசிகர்களின் வரம்பு மீறல் பிரபலங்களையும் தாண்டி வேறு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

- Advertisement -

Trending News