தனது பதினோரு வயதில் விளையாடும் பொழுது கையில் மணிக்கட்டு முறிவு ஏற்பட்டவன் அதற்கு பின்னால் ஏதேனும் விளையாட தோன்றுமா. இவருக்கு அதெல்லாம் ஒரு பெரிய காயமாகவே தெரியவில்லை அவர்தான் நம் இந்தியாவின் இ்ன்றைய தங்க மகன் “நீராஜ் சோப்ரா”.
அவர் கிராமத்து மக்களால் சர்பஞ்ச்(நாட்டாமை) என்றும் நண்பர்களால் மௌலிக் என்றும் அழைக்கப்படும் நீராஜ் பூர்வீகமாய் பானிபட்டை சேர்ந்தவர். சிறு வயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவருக்கு ஒரு கட்டத்தில் பாடி பில்டிங்கில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
தராசின் இரு தட்டுகள் போல காலை பாடி பில்டிங் மாலை விளையாட்டு என தொடர்ந்துள்ளார். ஒரு சமயம் கூடைப்பந்து வியைாட்டின் போது மணிக்கட்டு முறிந்து விடவே வீட்டை விட்டு வெளியேறுவதற்கே சில மாதங்கள் வரை சிரமப்பட்டார்.
மீண்டெழுந்த நீராஜ் மீண்டும் கிரவுண்டுக்கு போனார். ஆரம்பத்தில் பயிற்சியாளர் இல்லாமல் விளையாடிய நீராஜூக்கு ஒரு கட்டத்தில் சிறந்த பயிற்சியாளர் கிடைத்திருந்தார். அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் தான் அவரை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவிற்காக கோல்டடிக்க வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
அத்தனை இன்னல்களை வாழ்வில் கடந்த நீராஜ் சோப்ராவிற்கு இந்த டோக்கியோ கோல்டு தான் சமூகத்தில் சரியான அந்தஸ்தை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த நீராஜ் இந்தியாவிற்கே தங்கம் சேர்ப்பார் என்பது அத்தனை எளிதான விடயமல்ல.
2016-ல் பி.வி.சிந்து சாக்ஷி மாலிக் என கொண்டாடிய அதே தருணத்தில் இந்தியா இன்னொரு கொண்டாட்டத்திற்காக நீராஜை தயார் செய்து கொண்டிருந்தது. அதே ஆண்டில் 20 வயதுக்கு உட்பட்டவருக்கான உலக ஜாவ்லின் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெற்றார் தங்கமகன்.
2019-ல் ஏற்பட்ட காயம் காரணமாய் அறுவை சிகிச்சை மேற்கொண்டவருக்கு 2020 ஊரடங்கு போட்டி தள்ளி வைப்பு மேலும் பல சவால்களை உருவாக்கியது. உளிபட்ட கல் தான் சிலையாகும் என்பது போல கஷ்டங்களை மட்டுமே பார்த்து வந்த நீராஜ் உலக சாம்பியன் ஆனார். இப்போது இந்தியாவின் தங்க மகனாகிப்போனார்.