செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

மலையாள நடிகையுடன் ஜோடி சேரும் நீயா நானா கோபிநாத்.. முக்கிய கதாபாத்திரத்தில் சர்ச்சை நடிகை!

என்னதான் அடுத்தடுத்து தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் நடிகை வனிதா விஜயகுமாருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார் வனிதா விஜயகுமார்.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதாலோ என்னவோ மக்கள் மத்தியில் வனிதா வில்லியாகவே தெரிகிறார். ரியாலிட்டி ஷோ மூலம் பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா தற்போது ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மணி நாகராஜ் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

ஒரு டாக்டர் மற்றும் 4 கர்ப்பிணிப் பெண்களை மையமாகக்கொண்டு உருவாகும் இப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நீயா நானா கோபிநாத் நடிக்கிறார். அவருக்கு மனைவியாக மலையாள நடிகை லீனாகுமார் நடிக்கவுள்ளார்.

இவர்கள் தவிர அனிகா, சீதா, வனிதா விஜயக்குமார் மற்றும் புதுமுக நடிகை க்ரிஷிகா ஆகியோர் 4 முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 16 முதல் 50 வயது பெண்கள் வரை சந்திக்கும் பிரச்சினைகளை கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

lena kumar
lena kumar

அடுத்த வார இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்திற்கு விஷ்ணு மோகன் இசையமைக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்து வருகிறார். இது எந்த அளவிற்கு அவருக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை.

vanitha-cinemapettai-01
vanitha-cinemapettai-01
Advertisement Amazon Prime Banner

Trending News