புதன்கிழமை, ஜனவரி 1, 2025

50 வருடங்களுக்கு முன்பே சார்பட்டா, இடியப்பா பரம்பரையைப் பற்றி பேசியுள்ள நாகேஷ்.. வைரலாகும் வீடியோ!

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நிஜ பெயர்கள் மறந்து அவர்களை கதாபாத்திரத்தின் பெயர்களை வைத்தே கூப்பிடும் அளவிற்கு தத்ரூபமாக நடித்து உள்ளனர்.

சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் பாக்ஸிங் தொடர்பான கதைதான் இப்படம். 1970-களில் நடப்பது போல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1970ஆம் ஆண்டு வெளியான படம் ஒன்றில் பழம்பெரும் நடிகர் நாகேஷ், சார்பட்டா பரம்பரை பற்றி பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்கள் நடுத்தெருவில் சண்டையிடும் போது அதற்கு கமெண்ட்ரி கொடுத்து, ஒருவர் சார்பட்டா பரம்பரை, மற்றவர் இடியாப்ப பரம்பரை என கூறுகிறார்.

இந்த சண்டையை உட்கார்ந்து வேடிக்கை பார்க்க 10 பைசா, நின்று கொண்டே பார்க்க 5 பைசா எனவும் டிக்கெட் போட்டு வசூலிக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகிறது. சார்பட்டா பரம்பரை படத்திற்கு இது நல்ல விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

nagesh-video
nagesh-video

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் எங்கு பார்த்தாலும் சார்பட்டா பரம்பரை படம் குறித்து தான் பேசி வருகிறார்கள். திரைப்பிரபலங்கள் முதல் அனைவரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

Trending News