Leo: மாஸ் ஹீரோக்களின் படம் வெளியாகிறது என்றாலே நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால் லியோவுக்கு அதிகாலை காட்சி தமிழ்நாட்டில் கிடைக்காத நிலையில் மற்ற மாநிலங்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் வழக்கம்போல் விஜய், லோகேஷ் கூட்டணிக்கு பாசிட்டிவ் கருத்துகள் தான் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் வேண்டுமென்றே சில நெட்டிசன்கள் படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகின்றனர். அதற்கு விஜய் ரசிகர்கள் தகுந்த பதிலடியையும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் லியோ சிங்கம் என்று நினைத்து போனால் பூனை குட்டியாக இருக்கிறது என்று சினிமா விமர்சகர் மனோபாலா கூறி இருப்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கூறியிருப்பதாவது, விஜய் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் படத்தில் பாராட்டும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இருந்தாலும் முடிவு மிகப்பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. லோகேஷ் படம் என்பதாலேயே இதற்கு அதிகபட்ச எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருந்தது.
ஆனால் அதை லியோ பூர்த்தி செய்யவில்லை. விக்ரம் கைதி ஆகிய படங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இது அதன் பக்கத்தில் கூட வர முடியாது என்ற அதிர்ச்சி விமர்சனத்தை கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி லோகேஷின் திரை வாழ்வில் இது மிகவும் பலவீனமான படம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரைப் போலவே பல விமர்சகர்கள் நாலா பக்கமும் தேடி பார்த்தேன் உருப்படியான விமர்சனம் வரவில்லை என்றும் கூறி படம் பார்க்க இருக்கும் ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீ வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பலைகளும் கிளம்பி வருகிறது. படத்தை பார்க்காமலேயே விஜய் மீது இருக்கும் வன்மத்தை இப்படி வெளிப்படுத்தாதீர்கள் என ரசிகர்கள் அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஏனென்றால் படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கொல மாஸாக இருக்கிறது என்ற கருத்துக்கள் தான் இப்போது பரவிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது வேண்டுமென்றே படத்தின் வசூலை குறைப்பதற்காக சிலர் தேவையில்லாத வேலையை பார்ப்பதாகவும் ஒரு பக்கம் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்தடுத்த காட்சிகளின் முடிவில் லியோ காலை வாரி விட்டதா இல்லையா என்ற கேள்விக்கான பதில் கிடைத்து விடும்.