வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகார்த்திகேயன் பட போஸ்டரை அட்டை காப்பி அடித்த நெல்சன்.. உத்திராட்சக் கொட்டை மட்டும் மிஸ்ஸிங்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரின் மூலமாக வெளியிட்டுள்ளது.

பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டரில் ரஜினி மாறுபட்ட தோற்றத்தில் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சோசியல் மீடியாவை அது கலக்கி கொண்டிருக்கிறது.

Also read: ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பட்ட அவமானம்.. பூமரங் போல RJ பாலாஜியும் சந்திக்கும் பிரச்சனை

இது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் இந்த போஸ்டர் சிவகார்த்திகேயன் படத்தின் போஸ்டர் போன்று இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா.

மிகப்பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது அந்தப் பட போஸ்டருக்கும், ஜெயில்ர் பட போஸ்டருக்கும் இருக்கும் ஒற்றுமைகளை ரசிகர்கள் லிஸ்ட் போட்டு தெறிக்க விடுகின்றனர்.

Also read: பழிதீர்க்கும் வெறியோடு ரஜினி.. இணையத்தை மிரட்டும் நெல்சனின் ஜெயிலர் பட போஸ்டர்

அந்த வகையில் இந்த இரண்டு போஸ்டர்களிலும் ஹீரோக்கள் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கின்றனர். இருவருமே கண்ணாடி போட்டுள்ளனர். இருவரின் முகத்திலும் ஒரு கடுமை தெரிகிறது. ஆனால் ரஜினி ஜெயலர் பட போஸ்டரில் கைகளை பின்னே கட்டிக்கொண்டு கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் காணப்படுகிறார்.

கனா பட போஸ்டரில் சிவகார்த்திகேயன் கைகளை முன்னே கட்டியவாறு கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை இல்லாமல் இருப்பார். இதுதான் சிறிய வித்தியாசம் மற்றபடி இரண்டு போஸ்டர்களும் அச்சு அசல் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் நெல்சனை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். ஒரு போஸ்டரை கூட உங்களால் சொந்தமாக உருவாக்க முடியாதா, இதிலும் சிவகார்த்திகேயனை தான் காப்பியடிப்பீர்களா என்று கேட்டு வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் இந்த ஐடியாவை சிவகார்த்திகேயன் தான் உங்களுக்கு கொடுத்தாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படத்தில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் பெயர் நெல்சன் திலீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒருவித காரணமாக இருக்கலாம் என்ற ரீதியிலும் பேசப்பட்டு வருகிறது.

Also read: வடிவேலுவை தூக்கி எறிந்த நெல்சன்.. ஒரு வேளை ரஜினி சொல்லி இருப்பாரோ!

sivakarthikeyan-kanaa
sivakarthikeyan-kanaa

Trending News