வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பண்ணுனதெல்லாம் போதும், ஒரேடியாக ஆப் செய்த ரஜினி.. விஜய்யிட்ட செஞ்ச மாதிரி நெல்சனின் பருப்பு வேகல!

ரஜினி- நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று டீசருடன் வெளியானது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தமன்னா, யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி போன்ற திரை பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் இதில் ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடிக்கிறார். கடைசியாக நெல்சனுக்கு பீஸ்ட் படமும் ரஜினிக்கு அண்ணாத்த படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காததால் இவர்கள் இருவருக்கும் ஜெயிலர் மிக முக்கியமான படமாக இருக்கிறது. இதனால் படத்தில் இருக்கும் ஒவ்வொரு முக்கிய முடிவுகளையும் ரஜினி தான் எடுத்துள்ளார்.

Also Read: ரஜினி போல தல முழுகிடலாம் என நினைத்த அஜித்.. தன்னம்பிக்கை கொடுத்து வளர்த்துவிட்ட வில்லன்

ஏனென்றால் நெல்சனின் படங்கள் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு ப்ரோமோ ஒன்றை அவர் பேசுவது போல, அனிருத் பேசுவது போல வீடியோவாக வெளியிடுவார். தன்னுடைய படங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு ஃபார்மட்டை வைத்திருக்கும் நெல்சன் ஜெயிலர் படத்திலும் அதை செய்ய பார்த்தார். ஆனால் பண்ணுனதெல்லாம் போதும் என்று ரஜினி ஒரேடியாக நெல்சனை ஆப் செய்துவிட்டார்.

இருப்பினும் நெல்சன் இயக்கிய முந்தைய படங்களில் அப்படி வெளியிட்ட ப்ரோமோ வீடியோ ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் மூன்று பேரும் சேர்ந்து ப்ரோமோ விட்டனர். அந்த ஒரு ப்ரோமோ படத்தை விட ஸ்பெஷலாக அமைந்தது. அந்த அளவிற்கு நகைச்சுவையாகவும் அனைவரும் ரசிக்க கூடிய விதமாகவும் அமைந்தது.

Also Read: டைம் பாஸ்க்கு காதலித்து நடிகையை கழட்டி விட்ட விஜய்.. அப்பா கண்ட்ரோலில் இருந்ததால் பரிபோன காதல் வாழ்க்கை

ஆனால் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு, நெல்சன் பற்றிய பேச்சுகள் பெரிதாக இல்லை, எப்படியோ ரஜினி நடித்த படத்தை முடித்துவிட்டார். சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திற்கும் எப்போதும் போல வழக்கமாக நெல்சன் வெளியிடும் நகைச்சுவையாக ப்ரோமோவை வெளிவிடுவார் என எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் கடைசியில் நெல்சனின் வழக்கத்திற்கு மாறாக ஜெயிலர் படத்தில் டீசர் மட்டுமே வெளிவந்தது. இதற்கு காரணம் ரஜினி தான்.

இதில் பெரிய நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் காட்ட வேண்டும். இதனால் நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். உங்கள் ப்ரோமோ, அந்த விஷயம் எல்லாம் என் படத்திற்கு வேண்டாம். நான் சொல்வதைப்போல செய்யுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த ஒரு விஷயம் வராதது ஏமாற்றம் அளிக்கிறது என பேசி வருகிறார்கள்.

Also Read: எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68

Trending News