செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நெல்சனிடம் இல்லாத ஒரு திறமை.. லோகேஷ் பக்கம் சாய்ந்த விஜய், காரணம் இதுதான்

Lokesh-Nelson: லோகேஷ், விஜய் கூட்டணியில் இப்போது லியோ உருவாகி இருக்கிறது. அக்டோபர் மாத சம்பவத்திற்கு தயாராகும் இப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களையும் கொண்டுள்ளது. அதனாலேயே இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்நிலையில் நெல்சனுக்கும், லோகேஷுக்கும் தான் இப்போது திரை உலகில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளதாக பேசி வருகின்றனர். அதாவது சூப்பர் ஸ்டாரை வைத்து நெல்சன் இயக்கியிருந்த ஜெயிலர் இப்போது இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்துள்ளது.

Also read: வெற்றிக்காக ரஜினி துணிந்து செய்த காரியம்.. அடுத்த தலைமுறையினரை சீரழிக்கும் லோகேஷ், நெல்சன்

அதேபோன்று தான் லியோ படமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் லியோ, ஜெயிலர் வசூலை முறியடிக்குமா என்ற விவாதம் தான் இப்போது அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் நெல்சன், லோகேஷ் இருவருக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் பற்றிய பேச்சும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது இவர்கள் இருவருமே இன்றைய தலைமுறைகளின் நாடியை பிடித்து படம் எடுப்பதில் கில்லாடியாக இருக்கின்றனர். ஆனால் ஒரு விஷயத்தில் நெல்சனை லோகேஷ் தூக்கி சாப்பிட்டு விடுவார். அது என்னவென்றால் மேக்கிங் விஷயத்தில் இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது.

Also read: நெல்சனுக்கு கார் வரும்னு பார்த்தா லோகேஷ் மிரள விட்ட பி.எம்.டபிள்யூ.. விலையை கேட்டா தலைய சுத்துது

நெல்சனை பொறுத்தவரை மேக்கிங் விசயம் கொஞ்சம் சுமாராகத் தான் இருக்கிறது. ஆனால் லோகேஷ் அதில் கில்லாடியாக இருக்கிறார். அதனாலேயே டாப் ஹீரோக்கள் இவருடன் பணி புரிவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் ஆர்டிஸ்ட்டுகளை அதிகம் வேலை வாங்காமல் அதே சமயம் தனக்கு தேவையான காட்சிகளை படமாக்கும் திறமையும் அவருக்கு இருக்கிறது.

அந்த வகையில் மேக்கிங் மற்றும் பிளானிங் தான் லோகேஷின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதைத்தான் தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர். அதனாலேயே இப்போது பலரும் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து லோகேஷை வளைத்து போட முயற்சி செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விஜய் இவர் பக்கம் சாயவும் இதுதான் காரணமாக இருக்கிறது.

Also read: அடுத்தடுத்து 4 பட தோல்வியால் லோகேஷ் இடம் சரணடைந்த மாஸ் ஹீரோ.. விட்டுக் கொடுத்த ரோல்க்ஸ் சூர்யா

Trending News