Jailer Audio Launch: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை பல சினிமா பிரபலங்களும், ரஜினி ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். லால் சலாம் படப்பிடிப்பு முடிந்து பின்னர் மாலத்தீவு சென்று இருந்த ரஜினிகாந்த் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தார்.
பொதுவாக ரஜினிகாந்தின் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் படக்குழுவினர் பற்றியும், படத்தை பற்றியும் ரொம்பவும் ஆர்வமாக பேசுவார். அதேபோல் தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னால் எந்த விஷயத்தை சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த முடியுமோ அது போன்ற பல விஷயங்களை நகைச்சுவை பாணியில் சொல்லிவிடுவார். ஆனால் இந்த முறை ரஜினியின் பேச்சு ரொம்ப வித்தியாசமாக இருந்தது.
Also Read:பீஸ்ட் மாதிரி நேரத்தில் கோட்டை விட்ட நெல்சன்.. ஜெயிலர் சென்சருக்கு பின் பயத்தில் ரஜினி
இசை வெளியீட்டு விழா அரங்கிற்குள் நுழைந்த ரஜினி இயக்குனர் நெல்சனை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். மேலும் மேடை ஏறி பேசும் பொழுது ஜெயிலர் திரைப்படத்தில் நெல்சனை இயக்குனராக போடுவதற்கு ரஜினி எவ்வளவு முயற்சி செய்தார் என்பதை பற்றியும் பேசி இருந்தார். நெல்சனுக்கு இந்த பட வாய்ப்பு கொடுக்கவே கூடாது என விநியோகஸ்தர்கள் ரஜினியிடம் ரொம்பவும் வற்புறுத்தி இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் தளபதி விஜய் தான்.
நெல்சன், பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுதே ரஜினிக்கு கதை சொல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துவிட்டது. ரஜினியும் கதைக்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் படம் ரிலீஸ் ஆகி நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனால் விநியோகஸ்தர்கள் ரஜினியிடம் பீஸ்ட் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்திருக்கின்றன, எனவே நெல்சன் இந்த படத்திற்கு வேண்டவே வேண்டாம் என்று ரஜினி இடம் சொல்லி இருக்கிறார்கள்.
Also Read:சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு.? ரஜினியை முன்னிறுத்தி சன் பிக்சர்ஸ் செய்யும் பாலிடிக்ஸ்
ஆனால் ரஜினி விநியோகஸ்தர்களிடம், நெல்சன் தான் இந்த படத்தை பண்ண வேண்டும், அவன் கண்டிப்பாக ஜெயிப்பான் என்று மிகுந்த நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறார். ரஜினி எப்போதுமே இது போன்ற விஷயத்தை மேடைகளில் பேச மாட்டார். ஒரு வேளை பீஸ்ட் தளபதி விஜய்யின் படம் என்பதால் மேடை ஏறி இந்த விஷயத்தை பற்றி பேசி இருக்கிறாரா என்று தெரியவில்லை.
ஆரம்பத்திலிருந்து ஜெயிலர் படத்திற்காக ரஜினி ரொம்பவும் மெனக்கெட்டு வருகிறார் என்று மீடியாக்களில் செய்திகள் வெளியாகிறது. இந்த படத்தில் தான் ஜெயிக்க வேண்டும் என்பதை தாண்டி, தனக்காக ஒரு படம் பண்ணி அதில் நெல்சன் ஜெயிக்க வேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் ரஜினிக்கு இருந்தது அவர் பேச்சிலேயே தெரிகிறது.
Also Read:சோத்துலையும் அடிபட்டாச்சு, சேத்துலையும் அடிப்படனுமா?. ஜெயிலரால் வெளிநாடு புறப்பட்ட விஜய்