சின்னத்திரைகளிலிருந்து வந்தவர் தான் நெல்சன் திலிப்குமார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த நெல்சன் அதன்பிறகு பெரிய நடிகர்களின் படங்களை இயக்க ஆரம்பித்தார்.
விஜய்யின் பீஸ்ட் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் அடுத்ததாக ரஜினிக்கு ஜெயிலர் என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இப்போது அடுத்ததாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.
இந்தப் படத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 55 கோடி சம்பளம் நெல்சனுக்கு பேசப்பட்டிருக்கிறது. இப்போது ஜெயிலர் 2 சம்பளமும் பத்தாது என லோகேஷ் ஃபார்முலாவை பின்பற்றி உள்ளார் நெல்சன். அதாவது லோகேஷ் சமீபத்தில் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன்
இப்போது அதேபோல் நெல்சன் பிளமெண்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதற்கான அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் நெல்சன் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் என்னுடைய 20 வயதில் மீடியாவில் நுழைந்த நிலையில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். இதில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்க வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருந்தது.
அதன்படி இன்று பிளமெண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். அதை உங்களிடம் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று நெல்சன் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.