திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அமரன் பட இயக்குனர் மீது நெல்சன் உச்சகட்ட கோவம்.. ஏன் தெரியுமா?

கவின் நடிப்பில் உருவான ப்ளடி பெக்கர் என்ற திரைப்படத்தை நெல்சன் தயாரித்திருந்தார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனங்களை பெறவில்லை.

லாபமும் இல்லை என்று ஒரு சில மீடியாக்கள் சொல்ல, படம் லாபம் தான் என்று நெல்சன் கூறியுள்ளார். தயாரிப்பில் சற்று சரிவை நெல்சன் சந்தித்தாலும், இயக்கத்தில் அவருக்கு பல வருடங்கள் கழித்து தொடர்ந்து எர்முகமாகவே அமைந்தது.

2009 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார் நெல்சன். ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன்பிறகு கிட்டத்தட்ட 9 வருட போராட்டத்திற்கு பிறகு தான் நெல்சனுக்கு மீண்டும் இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது.

நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை எடுத்து விமர்சன ரீதியாக புகழ்பெற்றார். இதை தொடர்ந்து, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார். அப்படம் நெல்சனை முன்னணி இயக்குனராக உயர்த்தியது.

ராஜ்குமார் பெரியசாமி மீது உச்சகட்ட கோவம்

இயக்குனர் நெல்சனும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் நெருங்கிய நண்பர்கள் தான். இந்த நிலையில் இருவரின் படங்களும் தற்போது தீபாவளிக்கு மோதியது. அதில் வெற்றி கண்டது என்னவோ, ராஜ்குமார் பெரியசாமி தான்.

இந்த நிலையில் நெல்சன் பேசிய ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. இருவரும் விஜய் டிவியில் ஒன்றாக பணியாற்றியுள்ளார்கள். அப்போது நடத்தப்பட்ட ஒரு விழாவுக்கு மணிரத்னம் வந்துள்ளார். அவருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என நெல்சன் ஆசைப்பட்டுள்ளார். அதற்கான வாய்ப்பு கிடைத்தபோது ராஜ்குமார் பெரியசாமி தான் நெல்சன் மற்றும் மணிரத்னம் இருக்கும் புகைப்படத்தை எடுத்தாராம்.

ஆனால் அடுத்த நாளே, தன் போனை துளைத்துவிட்டாராம். போனுடன் சேர்ந்து போட்டோவும் போய்விட்டதாம். நண்பனின் போன் துளைத்து விட்டதே என்ற வருத்தம் எல்லாம் இல்லையாம். போட்டோ போச்சே என்ற கடுப்பில் தான் இருந்தாராம். போன் துளைத்த சோகத்தில் ராஜ்குமார் பெரியசாமி இருக்க, அவர் மீது உச்சகட்ட கோவத்தில் நெல்சன் இருந்தாராம்.

Trending News