வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினி ரசிகர்களால் நெல்சனுக்கு வந்த தலைவலி.. இப்படியெல்லாமா சோதிக்கிறது

ரஜினிகாந்தின் 169 வது படமான ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு நான்கு ஹீரோயின்கள், ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார், ஹைதிராபாத்தில் ஷூட்டிங் என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே ரஜினி மற்றும் நெல்சனின் முந்தைய படங்களான அண்ணாத்தே, பீஸ்ட் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் இவர்கள் இருவருக்குமே ஜெயிலர் படத்தின் மீது ஒரு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இது போதாதென்று தற்போது ரஜினியின் ‘சிவாஜி’ திரைப்படம் ரி-ரிலீஸ் ஆனது.

Also read: ரஜினி கமல் போல் 2 உச்ச நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த படம்.. இனி நடக்க வாய்ப்பில்லாத சம்பவம்

சிவாஜி படம் கடந்த 2007ஆம் ஆண்டு AVM ப்ரொடக்சனில், இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக், சுமன், மணிவண்ணன், ரகுவரன் நடிப்பில் AR ரகுமான் இசையமைப்பில் வெளியானது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடி. ஆனால் பாக்ஸ் ஆபிசில் 152 கோடி வசூல் செய்தது.

இந்த படத்தில் ரஜினி-விவேக் கூட்டணியில் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் படி இருக்கும். மேலும் படம் முழுக்க ஹுமர் சென்ஸ் அதிகமாகவே இருக்கும். இப்பொழுது ரி-ரிலீஸ் ஆன போதும் ரசிகர்கள் அந்த ஹுமர் காட்சிகளை அதிகமாக ரசித்திருக்கிறார்கள். எனவே ரஜினியின் அடுத்த படமான ஜெய்லரிலும் இதே போன்ற ஹுமர் சென்ஸ் நிறைந்த காட்சிகளையே ரசிகர்கள் அதிகம் எதிர் பார்க்கின்றனர்.

Also read: இதுவரை ரஜினி பணியாற்றாத ஒரு லெஜன்ட்.. கமலுக்கு முன்பே காமெடியில் கலக்கிய ஜாம்பவான்

நெல்சன் டார்க் காமெடி சீன்களில் கெட்டிக்காரர். ‘கோலமாவு கோகிலா’ , ‘டாக்டர்’ திரைப்படங்களில் பட்டையை கிளப்பி இருப்பார். இதனால் ரசிகர்களுக்கு மத்தியில் நெல்சன் மீது ஒரு பெரிய நம்பிக்கை வந்தது. ஆனால் நெல்சன் விஜயின் பீஸ்ட் படத்தில் ஏதோ ஒன்றில் சறுக்கி விட்டார் என்றே சொல்லலாம்.

பீஸ்ட் படத்தின் சறுக்கல், ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு என இப்போது நெல்சனுக்கு ஒரு பெரிய அழுத்தமே உருவாகி இருக்கிறது. இந்த முறை ஜெயித்தே ஆக வேண்டும் என நெல்சன் சூட்டிங் ஸ்பாட்டில் கதையையும் , காட்சியையும் பக்காவாக செதுக்குகிறாராம்.

Also read: கெட்ட நேரம் சூழ்ந்ததால் படாத பாடுபடும் ரஜினி.. காரணம் என்னன்னு கேட்டா ஷாக்கா இருக்கு!

Trending News