சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

பிளாக்பஸ்டர் கொடுத்த லோகேஷே இதை செய்யல.. தலைகால் புரியாமல் ஆட்டம் போடும் நெல்சன்

தற்போது எங்கு திரும்பினாலும் விக்ரம் திரைப்படத்தைப் பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு விக்ரம் திரைப்படத்தின் மூலம் கமல் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இந்த வெற்றியில் பெரும் பங்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இருக்கிறது.

கைதி, மாஸ்டர் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த லோகேஷ் தற்போது விக்ரம் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கமலின் வயதுக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்து அவருடைய மாசுக்கு எந்த குறையும் இல்லாமல் படத்தை கொடுத்திருக்கும் லோகேஷை பலரும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

என்னதான் மிகப்பெரிய அளவில் பேரும், புகழும் கிடைத்தாலும் அந்த தலைக்கணம் சிறிதும் இல்லாமல் இருக்கும் லோகேஷ் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தற்போது படக்குழுவினர் முதற்கொண்டு அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு எடுத்து வரும் லோகேஷ் எந்த கர்வமும் இல்லாமல் இயல்பாக இந்தப் படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம் என்று கூறுகிறார். மேலும் இந்த வெற்றியை கர்வமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல தன்னுடைய அடுத்த பட வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் டாக்டர் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த நெல்சன் அந்த கர்வத்தினால் பீஸ்ட் திரைப்படத்தில் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டார். அதன் விளைவாக திரைக்கதையில் பல குளறுபடிகள் இருந்தது. இதை சர்வதேச அளவில் பலரும் விமர்சித்தனர்.

ஒருவகையில் பீஸ்ட் படத்தின் இந்த சொதப்பல்களுக்கு நெல்சன் தான் காரணம் என்று விஜய் ரசிகர்கள் தற்போது வரை கூறி வருகின்றனர். ஆனால் நெல்சன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றியுள்ளார்.

கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல் இவர் தன்னுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி விட்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த பலரும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷே தன்னுடைய சம்பளத்தை ஏற்றவில்லை. ஆனால் நெல்சன் இப்படி தாறுமாறாக ஆட்டம் போடுகிறாரே என்று வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

Trending News