திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாப்பிள்ளை அவர் தான், ஆனா சட்டை என்னோடது.. சூப்பர் ஸ்டாரால் அவமானப்பட போகும் நெல்சன்

Jailer Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக உள்ளதால் தற்போது ஜெயிலர் படத்தின் ஹைப் தொடங்கிவிட்டது. அதன்படி சமீபத்தில் பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடைபெற்றது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். மேலும் சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய் கதாநாயகனாக நடித்த நிலையில் படம் ட்ரோல் செய்யப்பட்டது.

Also Read : இவர் தேறவே மாட்டார் என ரஜினி நினைத்த நடிகர்.. 4 படங்களில் தலைவரை மிரட்டிய நடிப்பு சூறாவளி

இதனால் இணையத்தில் நெல்சன் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அதோடு மட்டுமல்லாமல் அடுத்ததாக ரஜினி நெல்சனுக்கு வாய்ப்பு தர மாட்டார் என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது. ஆனால் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற ஸ்டைலில் நெல்சன் தான் தனது படத்தின் இயக்குனர் என ரஜினி முடிவு செய்துவிட்டார்.

அதன்படி ஜெயிலர் படமும் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவிட்டது. ஆனாலும் ரஜினி நெல்சன் மீது முழு நம்பிக்கையும் வைக்கவில்லையாம். அதாவது அவர் வைத்திருந்த ஒன்லைன் ஸ்டோரியை வைத்து தனக்கு தெரிந்த முன்னணி இயக்குனர்களின் ஆலோசனை படி தான் ஜெயிலர் படத்தை எடுத்து உள்ளார்களாம்.

Also Read : ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு.. ரஜினியை ஒதுக்கி கமலை மட்டும் வளர்த்து விட்ட பாலச்சந்தர்

ஆகையால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் முழுக்க முழுக்க அதை நெல்சன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் படையப்பா படத்தில் வரும் வசனம் போல மாப்பிள்ளை அவர் தான், ஆனா சட்டை என்னோடது என்பது போல ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தான், ஆனால் கதை மற்றொருவருடையது.

ஆகையால் சூப்பர் ஸ்டாரால் நெல்சன் அவமானப்படும் அபாயம் இருக்கிறது. ஆனாலும் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் ரஜினி நெல்சனை கட்டி தழுவி முத்தம் கொடுத்து இருந்தார். என்னதான் கதை வேறு ஒருவராக இருந்தாலும் அதை கையாண்டது நெல்சன் தான் என்ற சந்தோஷத்தில் ரஜினி இவ்வாறு செய்திருக்கிறார்.

Also Read : 40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

Trending News