வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினியை இயக்கியதால் நெல்சனுக்கு குத்தப்பட்ட முத்திரை.. கை கொடுக்க ஆள் இல்லாமல் திண்டாடும் பரிதாபம்

Nelson: நெல்சன் ஆரம்பத்தில் எடுத்த படங்கள் காமெடியாகவும், குடும்பத்துடன் பார்க்கும் படியாக மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். ஆனாலும் இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்தார். அப்பொழுது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தது. அதனால் மொத்தமாக துவண்டு போய்விட்டார் நெல்சன்.

அந்த நேரத்தில் இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டவர் தான் ரஜினி. நெல்சன் மீது முழு நம்பிக்கையை வைத்து ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்தார். அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வசூல் சாதனையை பெற்று ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனாலும் தற்போது நெல்சன் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

அதற்கு காரணம் ஜெயிலர் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்ததால் தான் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதிலும் ரஜினி நடிக்கவில்லை என்றால் அந்த படம் கொஞ்சம் கூட ஓடி இருக்காது. அதனாலையே நெல்சனின் கதை யாருக்குமே ஒத்து வர மாட்டேங்குது. இவர் கதையே கேட்டால் பெரிய பட்ஜெட் படமாக இருக்கிறதாம்.

Also read: மூன்று பார்ட் 2 படங்களை உருவாக்க நெல்சன் போடும் ராஜதந்திரம்.. சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபமா.?

உதாரணத்திற்கு இவர் தனுஷிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் இப்போது வரை நெல்சனுக்கு ஓகே சொல்லவில்லை. ஏனென்றால் நெல்சன் சொன்ன கதைகளெல்லாம் 400 கோடி பட்ஜெட்டுக்கு மேல் இருக்கிறதாம். அப்படிப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் நடித்தால் மட்டுமே ஒர்க் அவுட் ஆகும்.

இவர்களை தவிர மற்ற நடிகர்கள் யார் நடிச்சாலும் செட்டாகாது என்று தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி பெரிய படத்தை தயாரிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நெல்சன் தற்போது திண்டாடி கொண்டு வருகிறார். அந்த வகையில் ரஜினி படத்தை எடுத்தது ஒரு குத்தமா என்று நினைக்கும் படி இவருக்கு ஒரு முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதனால் தற்போது வேறு வழி இல்லாமல் சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.  ஆரம்பத்தில் எடுத்த கோலமாவு கோகிலா மாதிரி ஒரு படத்தை எடுத்து அதன் மூலம் வெற்றியை பார்க்கலாம் என்று முயற்சி செய்கிறார். இதற்கிடையில் இவரை கை கொடுத்து தூக்கிவிடும் அளவிற்கு பெரிய நடிகர்கள் யாரும் முன்வரவில்லை.

Also read: லியோவில் புஸ்ஸுன்னு போன 4 விஷயங்கள்.. நெல்சன் போல் லோகேஷ் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

Trending News