திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி கொடுத்த பூஸ்ட் 2ம் பாகத்திற்கு தயாரான நெல்சன்.. இத்தனை படங்களா? என்னடா இது வெறித்தனமா இருக்கே!

Director Nelson: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி மக்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் தான் ஜெயிலர். உலகெங்கும் பேசப்படும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டு நெல்சன் மேற்கொள்ள போகும் அடுத்த அப்டேட் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

சமீப காலமாய் விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு பெரிதாய் பேசப்பட்டு வரும் லோகேஷ் கனகராஜுக்கு நிகராய் தற்பொழுது ஜெயிலர் படத்தை இயக்கி வெற்றியை கண்டு வருகிறார் நெல்சன். யார் இந்த நெல்சன் என கேள்வி கேட்கும் அளவிற்கு சில படங்களையே மேற்கொண்டு இருந்தாலும், அவை வெற்றி படமாய் அமைந்ததே இதன் காரணம்.

Also Read: ஜாதியை வைத்து சம்பாதிப்பது எல்லாம் ஒரு பொழப்பா.. அந்த ரெண்டு பேரை கிழித்து தொங்க விட்ட கௌதமன்

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் தான் நெல்சன். இவரின் பீஸ்ட் படம் விமர்சனங்களுக்கு ஆளாகினாலும், அதை முறியடிக்கும் விதமாய் ஜெயிலர் படத்தில் ரஜினியை வைத்து செய்து காட்டிவிட்டார் என சொல்லும் அளவிற்கு இவரின் இயக்கம் அமைந்துள்ளது.

தனக்கு ஏற்பட்ட தோல்வியை எதிர்கொண்டு சாதித்துக் காட்ட வேண்டும் என்ற முயற்சியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை கண் கொத்தி பாம்பாய் மேற்கொண்டு வெற்றியை கண்டுள்ளார். அதைத்தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்தால் ஓயாத அக்கப்போர், ஆண்டவர் கொடுத்த பதிலடி.. அட இது ஏன் ரஜினிக்கு தோணல!

இதை கொண்டு இப்படத்தின் பாகம் 2 மேற்கொள்ள போவதாக வெளியான தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தன் அனைத்து வெற்றி படங்களின் பாகம் 2 வையும் மேற்கொள்ள போவதாகவும் திட்டம் தீட்டி வருகிறாராம் நெல்சன்.

இவை எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியாமல், ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டு தற்போது இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நெல்சன். இவர் போற போக்கை பார்த்தால் லோகேஷ் கனகராஜ் இடத்தை இவர் பிடித்து விடுவார் போல என கூறும் அளவிற்கு இருந்து வருகிறது.

Also Read: சூர்யாவிற்கு வரிசை கட்டி இருக்கும் அடுத்தடுத்த 4 படங்கள்.. தரமான சம்பவத்தை செய்ய போகும் ரோலக்ஸ்

Trending News