சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

பீஸ்ட் படத்தால் மிகப்பெரிய வாய்ப்பை இழந்த நெல்சன்.. ஏன் தளபதிக்கு செஞ்சு விட்ட வர போதாதா?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அந்தத் திரைப்படத்திற்கு பல நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தது. இதற்கு நெல்சன் தான் காரணம் என்று விஜய் ரசிகர்கள் இப்போது வரை அவரை திட்டித் தீர்க்கின்றனர்.

இந்நிலையில் நெல்சன் பீஸ்ட் திரைப்படத்தால் தனக்கு இந்தி படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோனது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த நெல்சன் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதன் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக மாறிய நெல்சன் டாக்டர் திரைப்படத்தின் மூலம் அதிக அளவில் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகுதான் அவருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்தியில் இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நெல்சன் அந்த திரைப்படத்தை இயக்க முடியாமல் போய் விட்டதாக கூறியுள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த ரீமேக் படத்தில் அவரின் மகள் ஜான்வி கபூர், நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீது பாலிவுட்டில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படம் குறித்து தற்போது நெல்சன் தெரிவித்துள்ள இந்த செய்தியை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை மேலும் கிண்டல் அடித்துள்ளனர். அதாவது பீஸ்ட் படத்தில் தளபதியை வச்சு செஞ்ச வரை பத்தாதா, இதில் பாலிவுட் வாய்ப்பு போய்விட்டதே என்ற வருத்தம் வேறயா என்று கேலி செய்து வருகின்றனர்.

தற்போது நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தையாவது விளையாட்டுத்தனமாக இல்லாமல் சற்று கவனத்தோடு இயக்குங்கள் என்று ரஜினியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending News