Nelson: சூப்பர் ஸ்டார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் மூலம் மிகப்பெரிய சம்பவத்தை நிகழ்த்தி காட்டி விட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பாக வெளிவந்த இப்படம் தற்போது வரை 300 கோடியை தாண்டி வசூலித்து இருக்கிறது.
இந்த அளவுக்கு அமோக வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வரும் இந்த ஜெயிலரில் பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் சில லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒரு விஷயத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் அது குறித்து நெல்சனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also read: எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய 2 இயக்குனர்கள்.. சூப்பர் ஸ்டாரை ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய நெல்சன்
அதாவது ரிட்டயர்மென்ட் வாங்கிய முத்துவேல் பாண்டியன் தன் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திடீரென தன் மகன் இறந்து போன நிலையில் அதற்கு காரணமானவர்களை ரஜினி பழிவாங்குகிறார். அதன் முடிவில் வில்லன் தன் மகன்தான் என்று தெரியவரும் சூழலில் அவரை சூப்பர் ஸ்டார் கொன்று விடுவது தான் படத்தின் கதை.
இதை தற்போது கூறிவரும் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ஜெயிலராக இருக்கும் போது வில்லன் ஜாக்கி ஷெராப்புக்கு சிறையில் சிகரெட் போன்ற பொருட்கள் கிடைப்பதற்கு உதவுகிறார். அதேபோன்று அவருடைய தோஸ்த்தாக இருக்கும் மோகன்லால் கடத்தல், கொலை போன்ற சம்பவங்கள் செய்யும் போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மேலும் தாதாக்களை நல்வழிப்படுத்த அவர் முயற்சி செய்தும் கூட மோகன்லால் மாறவில்லை. இப்படி இருக்கும் போது பணத்துக்காக தவறு செய்த மகனை கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் தந்தை மகனுக்கான உறவை இன்னும் கொஞ்சம் காட்சிப்படுத்தி காட்டி இருக்கலாம். அந்த விஷயத்திலும் நெல்சன் சொதப்பி இருக்கிறார். இந்த லாஜிக்கை யோசிக்காமல் காட்சியை வைத்தது ஏன் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே ஜெயிலரில் சுனில், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் கதாபாத்திரங்கள் தேவையில்லாத ஆணி என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இப்படிப்பட்ட சில லாஜிக் மீறல் விஷயங்களும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதை ப்ளூ சட்டை மாறன் கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக கலாய்த்துள்ளார். ஆனால் இனி இதைப் பற்றி இப்போது பேசி என்ன பிரயோஜனம். படம் எப்போதோ மக்களை சென்றடைந்து விட்டது என ஜெயிலருக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகின்றனர்.