ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

அதிரடி காட்டிய சூப்பர் ஸ்டார்.. விட்டதைப் பிடிக்க தீயா வேலை செய்யும் நெல்சன்

பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலிப்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 169 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனால் இந்த படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் பீஸ்ட் திரைப்படத்தின் கலவையான விமர்சனங்களால் நெல்சன் மீது ரசிகர்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டது.

மேலும் சூப்பர் ஸ்டார் இவரின் இயக்கத்தில் நடிக்க கூடாது என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அதற்கு ஏற்றாற்போல் சூப்பர் ஸ்டாரும் சில காலங்கள் இந்த படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து வந்தார்.

அதனால் இந்தத் திரைப்படத்தை நெல்சன் இயக்க மாட்டார் என்ற ஒரு வதந்தியும் கடந்த சில நாட்களாக பரவி வந்தது. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினிகாந்த், நெல்சனிடம் இந்தப் படத்தை நாம் சேர்ந்து பண்ணலாம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.

இதனால் உற்சாகமடைந்த நெல்சன் தற்போது கதையை முழுவதுமாக தயார் செய்து ஸ்கிரிப்டை அப்படியே சூப்பர் ஸ்டாரிடம் கொடுத்திருக்கிறார். அதை நன்றாகப் படித்துப் பார்த்த ரஜினி தனக்கு ஏற்றவாறு சிறுசிறு திருத்தங்களை கூறியிருக்கிறார்.

நெல்சனும் அதை அப்படியே ரஜினிக்கு பிடித்த வகையில் மாற்றி அமைக்கும் வேலையில் தற்போது பரபரப்பாக இருக்கிறாராம். அதனால் இந்த திரைப்படம் வரும் ஜூலை மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்ற ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.

Trending News