புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஜெயிலர் ரிலீஸ் பரபரப்பில் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட நெல்சன்.. இவங்கள வச்சே படம் எடுக்கலாம் அவ்வளவு அழகு

Nelson Dilipkumar Wife Photos: கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான  நெல்சன் திலீப்குமார், அடுத்தடுத்து டாப் நடிகர்களின் பட வாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் 100 கோடியை அள்ளியது. அதன் தொடர்ச்சியாக வந்த தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை  பெற்றது.

இருந்தாலும் தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து  ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார். நாளை ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்தை குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.  ஜெயிலர் படத்தின் ரிலீஸ் பரபரப்பின் மத்தியிலும் நெல்சன் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: ஜெயிலர் பார்த்தாச்சு, 4 வருடம் கழித்து இமயமலை கிளம்பிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

நெல்சன் திலீப் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நெல்சன் மனைவி மோனிஷா தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் நெல்சன் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன்  இருக்கிறார். இந்த குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனின் மனைவி ஹீரோயின்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் செம க்யூட் ஆக இருக்கிறார்.

Also Read: அஜித் நீங்க ரஜினியிடம் கத்துக்க வேண்டிய முக்கியமான விஷயம்.. பெரிய மனுஷன்னு நிரூபித்த சூப்பர் ஸ்டார்

இவங்கள வச்சே படம் எடுக்கலாம் அவ்வளவு அழகு என்று நெல்சன் மனைவியின் அழகை வர்ணிக்கின்றனர். மேலும் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட மோனிஷா நெல்சனுக்கு பின்புறம் அமர்ந்து  அவரை மிகவும் உற்சாகப்படுத்தினார். அப்போது அவர் கொடுத்த கியூட் ரியாக்ஷன் பலரையும் மயக்கியது.

அப்போதிலிருந்து நெல்சனின் மனைவி மோனிஷாவை குறித்து ரசிகர்களும் அதிகம் பேசத் துவங்கி விட்டனர். அவரை குறித்த  மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவுகிறது. ‘நெல்சனுக்கு கிடைச்ச மாதிரி மனைவி கிடைச்சா போதும்’ என்றும் சிலர் இந்த கியூட் ஃபேமிலி புகைப்படத்தை பார்த்து ஏக்கத்துடன் கமெண்ட் செய்கின்றனர்.

ஹீரோயின்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் நெல்சனின் மனைவி

nelson-family-cinemapettai
nelson-family-cinemapettai

Also Read: நெல்சனால் இமயமலைக்கு சென்ற ரஜினி.. ஜெயிலரை பார்த்த பின் ஏற்பட்ட குழப்பம்

Trending News