வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை காலி பண்ண நெல்சன், ரஜினி போட்ட பிளான்.. சம்பந்தமில்லாமல் தமன்னா பாட்டை வெளியிட்ட காரணம்.!

Leo Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் ‘நா ரெடி’ என்ற முதல் பாடலை வெளியிட்டு எப்பொழுதும் போல விஜய் வெற்றி பெற்றார். ஆனால் இப்பொழுது இந்த படத்திற்கு போட்டியாக ரஜினி நடித்த ஜெயிலரும் ரெடியாகிவிட்டது. படத்தின் முதல் பாடல் என்றாலே அது ரஜினி தான்.

ரஜினியை வைத்து தான் அனைத்து நடிகர்களுமே முதல் பாடல் இன்ட்ரொடக்சன் காட்சி போன்றவை வைத்து வெற்றி பெற்றார்கள். ஆனால் ரஜினி தற்பொழுது மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார். அவரை நிரூபிக்க என்ன வேணாலும் செய்யலாம்.

Also Read: அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் ரஜினி.. பிரம்மாண்டமாக நடக்கப் போகும் ஆடியோ லான்ச்

தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் விஜய் இமேஜை காலி செய்ய ரஜினி தனது முதல் பாடலை வெளியிட்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் தமன்னா நடித்த பாடலை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ஒரு காரணம் உள்ளது.

ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி, ‘எனது பாடலை வெளிவிட வேண்டாம். தமன்னா நடித்த பாடலை மட்டுமே வெளியிடுங்கள். அதற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்’ என்று சொல்லி இருக்கிறார்.

Also Read: அரேபிய குதிரையாக மாறி சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட தமன்னா.. ட்ரெண்டாகும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

அதன்படி ஜெயிலர் படத்தில் தமன்னா ரஜினியுடன் ஆடிய ஐட்டம் பாடலான ‘காவாலா’ நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே பல மில்லியன்களை கடந்தது. அதிலும் ரஜினி ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து தற்பொழுது விஜய்யின் ‘நா ரெடி’ பாடலை மறக்க செய்துவிட்டார்.

அப்போ ரஜினி பாடல் முழுக்க மாஸ் காட்டும் ஜெயிலர் படத்தின் முதல் பாடலை வெளியிட்டு இருந்தால் நிலைமை வேற மாதிரி மாறி இருக்கும். ‘என்னா இருந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்’ என பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

Also Read: அந்தரங்க காட்சிக்கு தனி ரேட்.. கண்டிஷன் போட்டு கல்லா கட்டிய தமன்னா

Trending News