சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நயன்தாரா திருமணத்திற்குக் கூட வரமுடியாத நெல்சன்.. பீஸ்ட் படத்தால் பெருத்த அவமானம்

பல வருடங்களாக திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் ஜூன் 9ஆம் தேதி கடந்த வியாழக்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார். இந்நிலையில் நயன்தாரா உடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

ஆனால் தன்னுடைய முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் நடித்த நயன்தாராவின் திருமணத்தில் நெல்சன் கலந்துகொள்ளவில்லை. அப்போது உச்ச நட்சத்திரமாக இருந்த நயன்தாராவுக்கு காமெடி நடிகரான யோகிபாபுவை ஜோடியாக நடிக்க வைத்திருந்தார் நெல்சன்.

இந்த படத்தை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற பெரிய கேள்வி இருந்தது. ஆனால் கோலமாவு கோகிலா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்த பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் தளபதி விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் சின்ன குழந்தைகள் கூட நம்ப முடியாத விஷயங்களை படத்தில் நெல்சன் வைத்திருந்தார்.

இதனால் எல்லோரும் நெல்சனை ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். எங்கு போனாலும் தொடர்ந்து இதுபோன்ற கலாய் வருவதால் நெல்சன் எந்த நிகழ்ச்சியிலும் தற்போது கலந்து கொள்வது இல்லையாம். அதனால்தான் தன்னுடைய முதல் படத்தின் நாயகி நயன்தாராவின் திருமணத்திலும் நெல்சன் பங்குபெறவில்லை.

Trending News