திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

Rajinikanth – Nelson :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த சில படங்கள் ரஜினிக்கு நன்றாக செல்லாததால், இந்த முறை ஜெயிலரில் ஜெயித்தே தீர வேண்டும் என ஆசைப்பட்ட அவருக்கு முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்தினால் கிடைத்திருக்கிறது.

படம் ரிலீஸ் இருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் நெல்சனை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். நெல்சன் கூட ரஜினியை பற்றியும் அவருடைய படத்தில் பணி புரிந்ததை பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்து இருந்தார். ஆனால் ரஜினி, நெல்சன் பற்றி பேசியது இதுவரை மற்ற இயக்குனர்களை பற்றி பேசாத விதமாக இருந்தது.

Also Read:16 ஆண்டு பகையை நெல்சனை வைத்து தீர்த்துக் கொண்ட சன் டிவி.. பக்காவாக காய் நகர்த்திய கலாநிதி

நெல்சன் முதல் நாள் கதை சொல்ல வரும்பொழுது, லேட்டாக வந்துவிட்டு ரஜினியிடம் நல்ல காபி வேண்டும் என கேட்டது, ரஜினியின் பழைய காதல் கதையை கேட்டு நெல்சன் சார்ஜ் ஏற்றத் தான் என சொன்னது என அவர் ரொம்பவும் கிண்டலாக நெல்சனை கலாய்த்து இருந்தார். மொத்த அரங்கமும் ரஜினி பேசி முடிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருந்தது.

ரஜினிக்கு பின் பேசிய இயக்குனர் நெல்சன் இந்த ஒரு வருடத்தில் ரஜினியை பார்த்து புரிந்து கொண்ட விஷயங்களை பற்றி பகிர்ந்திருந்தார். ரஜினிகாந்த் வெளியில் பார்ப்பது போல் ரொம்ப சீரியஸான ஆள் கிடையாது என்றும், ரொம்பவும் கலகலப்பாகவும், கலாய்த்தும் பேசக்கூடியவர் என்று சொல்லி இருந்தார்.

Also Read:காயப்பட்ட சிங்கத்தின் வெறித்தனமான கர்ஜனை.. நெல்சனை அவமானப்படுத்திய மீடியா, ஜெயிலரால் ஏற்பட்ட மாற்றம்

பொதுவாக இயக்குனர் நெல்சன் நிறைய நிகழ்ச்சிகளை பார்த்தால் அவர்தான் மற்றவர்களை கலாய்த்து தெறிக்க விட்டு இருப்பார். ஆனால் ரஜினிகாந்த் நெல்சனுக்கே இந்த விஷயத்தில் தண்ணீர் காட்டி இருக்கிறார். பல நேரங்களில் ரஜினி, உண்மையாகத்தான் பேசுகிறாரா அல்லது தன்னை கலாய்ப்பதற்காக சொல்கிறாரா என தெரியாமல் குழம்பி இருக்கிறாராம் நெல்சன்.

பல நேரங்களில் ரஜினி பேசிவிட்டு சென்றதும், நெல்சன், அனிருத்துக்கு போன் செய்து ரஜினி இப்படி சொன்னார், இது உண்மையில் சொல்கிறாரா அல்லது கலாய்க்கிறாரா என கேட்டு தெரிந்து கொள்வாராம். இளம் இயக்குனர்களோடு பணிபுரியும் ரஜினி அவர்களே திணறும் அளவுக்கு காமெடி சென்ஸ் உடன் இருப்பது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Also Read:விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்து படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Trending News