திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டார்க் காமெடிக்கு தரமான ஹீரோவை தட்டி தூக்கிய நெல்சன்.. சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது, மாஸ் கூட்டணி

Director Nelson: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் படம் பட்டையை கிளப்பி வசூல் அளவில் சாதனை புரிந்து வருகிறது. இப்படத்தின் வெற்றி நெல்சனை மிகப்பெரிய உயரத்திற்கு தள்ளிவிட்டது. இதற்கு முன் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கலையான விமர்சனங்களை பெற்றதால் இவருடைய டைரக்ஷன் இந்த மாதிரி தான் இருக்கும் என்று இவரை பலரும் புறக்கணித்தார்கள்.

ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து படத்தை கொடுத்து தாறுமாறாக வெற்றியை பார்த்து வருகிறார். இருந்தாலும் இவரிடம் ஒட்டிக்கொண்டது ஒரு விஷயம் காமெடி. இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்கள் அனைத்தும் ஒரு முக்கியமான சீரியஸான விஷயத்தை வைத்து எடுத்திருக்கிறார்.

Also read: ஜெயிலர் வெற்றியால் அடுத்தடுத்து நெல்சன் கூட்டணியில் உருவாகும் 5 படங்கள்.. தலைசுற்ற வைக்கும் சன் பிக்சர்ஸ் பட்ஜெட்

ஆனால் இவர் எடுத்த அத்தனை படங்களும் காமெடி கலந்து கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் இதற்குப் பெரிய வரவேற்பு கொடுத்து. அனல் பீஸ்ட் மற்றும் ஜெயிலர் டாப் நடிகர்களை வைத்து இயக்கியதால் என்னமோ இவர் சொல்ற விஷயங்கள் சரியாக போய் சேர முடியாமல் தத்தளிக்குது.

அதற்கு காரணம் இவர் கதைக்கு ஏற்ற மாதிரி கதாநாயகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தால் கண்டிப்பாக ஒரு சக்சஸ் இயக்குனராக தொடர்ந்து இவரால் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் இவருக்கான அடுத்த ப்ராஜெக்ட்டில் ஒரு ஹீரோவை நடிக்க வைப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்.

Also read: தலைவருக்கு கொடுத்த ஜெயிலர் வெற்றி ஏன் விஜய்க்கு கொடுக்கல.. மறைமுகமாக நெல்சன் புலம்பிய காரணம் இதுதான்

இவர் கதைக்கு ஏற்ற சரியான ஆளு இவர்தான் என்று சொல்லும் படியாகவும் அந்த கதாநாயகன் தற்போது இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை சினிமாவில் காமெடியனாக மக்கள் மனதில் நுழைந்து தற்போது கதாநாயகனாக வந்து கொண்டிருக்கும் சந்தானம் தான். இவரை வைத்து நெல்சன் டார்க் காமெடியை வைத்து முழு நகைச்சுவை படமாக எடுக்கப் போகிறார்.

அப்படி மட்டும் இவர்கள் இரண்டு பேரும் கூட்டணி போட்டால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. அத்துடன் மாஸ் கூட்டணியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவருக்கு இவர் தான் என்று சொல்வதற்கு ஏற்ப நெல்சனுக்கு யோகி பாபு மற்றும் சந்தான போன்ற காமெடி நடிகர்களை வைத்து படம் எடுத்தால் அந்த படம் வேற லெவல்ல ஹிட் கொடுக்கும். அந்த வகையில் சரியான கதாநாயகனை நெல்சன் தற்போது தட்டித் தூக்கி விட்டார்.

Also read: மொத்தத்தையும் கெடுத்து குழப்பிய அனிருத்.. ரஜினியிடம் வசமாய் சிக்கி விழி பிதுங்கிய நெல்சன்

Trending News