செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அதிர்ஷ்ட நாயகிக்கு கல்தா கொடுத்த நெல்சன்.. வாய்ப்பை தட்டி பறித்த மலையாள நடிகை

விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக மிகவும் ஆசைப்பட்ட ஒரு நடிகையை நெல்சன் ஒதுக்கி வைத்துவிட்டார் என்ற செய்தி தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தால் இவர் தற்போது முன்னணி நாயகி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தான் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று செய்திகள் வெளிவந்தது. ஏனென்றால் நெல்சனின் ஆஸ்தான நடிகையாக இருக்கும் இவருக்கு எப்படியும் வாய்ப்பு கிடைத்து விடும் என்று பலரும் கூறி வந்தனர்.

Also read:ஜெயிலர் படத்திற்கு எக்கச்சக்க கண்டிஷன் போட்ட ரஜினி.. தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் நெல்சன்

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறினார். தற்போது அவர் நடிக்க இருந்த கேரக்டரில் மலையாள நடிகை மிர்ணா மேனன் நடித்துக் கொண்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க நெல்சனின் முடிவுதானாம்.

அதாவது டாக்டர் திரைப்படம் வெளிவந்த பிறகு பிரியங்கா மோகனை இவருடன் இணைத்து பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. அதன் காரணமாகவே நெல்சன் அவர் வாய்ப்பு கேட்டும் தர மறுத்துள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுத்தால் தேவையில்லாத பிரச்சினை கிளம்பும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Also read:தமிழ் சினிமாவின் பஞ்சத்தை போக்கிய 6 நடிகைகள்.. ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய பிரியங்கா மோகன்

அதனால் தான் பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடிக்க வில்லையாம். அவர் நடிக்க இருந்த கேரக்டரில் மற்றொரு நடிகை நடித்துக் கொண்டிருப்பது அவருக்கு பெரிய வருத்தமாக இருந்தாலும் விரைவில் சூப்பர் ஸ்டார் படத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது ரஜினியுடன் நடித்து வரும் மிர்ணா மேனன் தமிழில் ஏற்கனவே புர்கா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அந்த வகையில் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் அவர் உளவாளியாக நடிக்கிறாராம். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Also read:நண்பருக்காக கால்ஷூட்டை தூக்கிக் கொடுத்த ரஜினி.. சத்தம் இல்லாமல் வேலையை தொடங்கிய தயாரிப்பாளர்

Trending News