வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மொத்தத்தையும் கெடுத்து குழப்பிய அனிருத்.. ரஜினியிடம் வசமாய் சிக்கி விழி பிதுங்கிய நெல்சன்

Nelson-Rajini-Aniruth: சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பற்றிய செய்திகள் தான் இப்போது சோஷியல் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது.

அது மட்டுமின்றி நெல்சன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தற்போது இது அவருக்கு சந்தோஷமாக இருந்தாலும் படத்தை எடுத்து முடிப்பதற்குள் அவர் பட்ட பாடு அவருக்கு மட்டுமே வெளிச்சம். அந்த அளவுக்கு ரஜினி மற்றும் அனிருத் இருவரிடமும் சிக்கி விழி பிதுங்கி போனாராம் நெல்சன்.

Also read: சிவகார்த்திகேயனிடம் நண்பராக ஒட்டிக்கொண்ட 5 இயக்குனர்கள்.. ரஜினிக்கு செட்டே ஆகாத கேரக்டர்

அதிலும் அனிருத் உடன் அவர் எப்போது கூட்டணி அமைத்தாரோ அப்போதிலிருந்தே பிரச்சனை தானாம். ஏனென்றால் அனிருத் வேலை பார்க்கும் ஸ்டைலே வேற மாதிரி இருக்கும். அதாவது அவர் இரவு 9 மணியில் ஆரம்பித்து காலை 8 மணி வரை இசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வாராம்.

அதேபோன்று சூப்பர் ஸ்டார் காலை 9 மணி ஆனால் அலாரம் அடித்தது போல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுவாராம். இந்த இருவரும் இருக்கும் நேரத்தில் நெல்சன் அங்கு கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அப்படி பார்த்தால் இரவு பகல் பாராமல் அவர் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

Also read: விஜய் செய்தது போல் ரஜினியால் செய்ய முடியுமா.? செக் வைத்து சவால் விட்ட பிரபலம்

அந்த வகையில் ஜெயிலர் படம் ஆரம்பித்ததில் இருந்து இப்படித்தான் ஓடி ஓடி அவர் வேலை செய்தாராம். அதனாலேயே அவர் பட்ட கஷ்டத்திற்கு தற்போது தகுந்த பலன் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் பைத்தியமே பிடித்து விட்டது என்று நெல்சன் புலம்பி தள்ளிய காலமும் உண்டு.

அந்த அளவுக்கு அனிருத்தால் ஒரு பக்கம் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. மறுபக்கம் சூப்பர் ஸ்டாருக்கு திருப்தி ஏற்படுத்தும் வகையில் படத்தை கொடுக்க வேண்டும் என்ற பதட்டம் இருந்திருக்கிறது. இதையெல்லாம் சாமர்த்தியமாக கடந்து வந்த நெல்சன் தற்போது அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: ஜெயிலர் வசூலை தாங்க முடியாத ப்ளூ சட்டை.. தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் பிளாக்பஸ்டர் உறுதி தான் 

Trending News