வடிவேலுவை தூக்கி எறிந்த நெல்சன்.. ஒரு வேளை ரஜினி சொல்லி இருப்பாரோ!

அண்ணாத்த படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 169-வது படமான ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவை நடிக்க வைக்க பிளான் இருந்திருக்கிறது.

ஆனால் வடிவேலு ரொம்ப டிஸ்டப் பண்ணுவாரு. படத்தின் கதையில் அதை மாற்ற வேண்டும், இதை மாற்ற வேண்டும் என படத்தின் போக்கையே மாற்றி விடுவார் என்றெல்லாம் அவரை ஏற்கனவே வைத்து இயக்கிய இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Also Read: ஜெயிலரில் சூப்பர் ஸ்டாருடன் இணைய போகும் 4 ஹீரோயின்கள்!

இதையெல்லாம் காரணம் காட்டி வடிவேலுவை ஜெயிலர் படத்திலிருந்து தூக்குவதற்கு நெல்சன்  பிளான் போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் யோகிபாபு உடன் 3 படங்களில் ஏற்கனவே வேலை பார்த்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

ஆகையால் யோகிபாபுவை நன்கு அறிந்த நெல்சன் திலீப்குமார், அவரால் எந்த பிரச்சினையும் வராது. அவரையே ஜெயிலர் படத்தில் நடிக்க வைக்க திட்டம் போட்டிருக்கிறார். வடிவேலை பொருத்தவரை அவருடைய மதுரைப் பேச்சு மட்டுமல்லாமல் உடல் அசைவு, நடை, உடை அனைத்துமே ரசிகர்களை சிரிக்க வைக்கும். அப்படிப்பட்டவரை விட்டு விட்டு யோகி பாபு தான் வேண்டும் என நெல்சன் குட்டையை குழப்புகிறார்.

Also Read: ஜெயிலர் படத்தின் கதை இதுதான்!

ஆனால் ரஜினிக்கு வடிவேலுதான் ஜெயிலர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்புகிறார். ஆகையால் அவ்வளவு சீக்கிரம் நெல்சன் ஜெயிலர் படத்திலிருந்து வடிவேலு தூக்கி விட முடியாது. ஏற்கனவே குசேலன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் ரஜினி-வடிவேலு காம்போவில் வெளியான காமெடிகள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

ஆகையால் ஜெயிலர் படத்தில் காமெடி கொஞ்சம் சிரிக்கிற மாதிரி பண்ணனும். கடுப்பு வர மாதிரி பண்ண கூடாது என ரசிகர்களும் நெல்சனின் முடிவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Also Read: 35 வருட ரகசியத்தை உடைத்த வடிவேலு!