புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டைகர்கா ஹுக்கும் ஜெயிலர் 2 வுக்கு சன் பிக்சர்ஸ் காட்டிய பச்சை கொடி.. நெல்சனை கூப்பிட்டு மாறன் போட்ட ஆர்டர்

Actor Rajini : ரஜினி, நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் இமாலயா வெற்றி அடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் வசூல் வேட்டையாடி இருந்தது. மல்டி ஸ்டார் என எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வசூலால் ஆடிப்போன சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியது. அதேபோல் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் காரை கலாநிதி மாறன் அன்பு பரிசாக வழங்கி இருந்தார்.

இதை அடுத்து ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகுவதை ஏற்கனவே முதல் பாகத்திலேயே தெரியப்படுத்தி இருந்தார் நெல்சன். இந்த சூழலில் இப்போது ஜெயிலர் 2 படத்திற்கான ஆபீஸ் போடப்பட்டு உள்ளது.

ஜெயிலர் 2வில் நெல்சனின் சம்பளம்

மேலும் பட்ஜெட்டை பத்தி கவலைப்பட வேண்டாம் என மாறன் கூறிவிட்டாராம். ஜெயிலர் முதல் பாகத்தை விட நன்றாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். நெல்சன் இந்த சவாலை ஏற்ற படு பயங்கரமாக வேலை செய்து வருகிறார்.

அதோடு நெல்சனுக்கு இந்த படத்தில் 55 கோடி சம்பளம் கொடுக்கிறார்களாம். சன் பிக்சர்ஸ் பொதுவாக இவ்வளவு சம்பளம் இயக்குனர்களுக்கு கொடுத்ததில்லை. ஜெயிலர் 2 படத்திற்கு கொட்டிக் கொடுக்க காரணம் இருக்கிறது.

ரஜினி படத்தின் கலெக்ஷன் டபுளாக அள்ள வேண்டும் என குறி வைத்திருக்கின்றனர். மேலும் டைகர்கா ஹுக்கும் படத்திற்கு சன் பிக்சர்ஸ் பச்சைக்கொடி காட்டியதால் நெல்சன் இனி புயல் வேகத்தில் செயல்பட இருக்கிறார்.

Trending News