புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கொட்டும் வசூலில் எஸ் ஜே சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை.. தற்போது வரை கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

மாஸ்டர் படத்திற்கு பிறகு ஒரு சரியான திரைப்படம் திரையரங்குக்கு வரவில்லையே என அனைவரும் கவலையில் இருந்த நிலையில் அதைப் போக்கும் விதமாக செல்வராகவன் மற்றும் எஸ்ஜே சூர்யா கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி சின்னாபின்னமானது. இந்நிலையில் தற்போது அந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

மேலும் எஸ் ஜே சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு பலம் சேர்க்க இதுவரை இல்லாத அளவுக்கு எஸ் ஜே சூர்யாவின் படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது நெஞ்சம் மறப்பதில்லை.

பேய் ஜானரில் உருவான இந்த படம் தற்போது வரை சென்னையில் மட்டும் 1.31 கோடி வசூல் செய்துள்ளதாம். மிகப் பெரிய நடிகரின் படம் அல்லாமல் மற்றொரு நடிகரின் படம் அதிக வசூல் செய்வது இதுவே முதல் முறை என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இந்த படம் 10 முதல் 15 கோடி வசூல் செய்திருக்கும் என தெரிகின்றன. படத்தின் பட்ஜெட்டை விட வசூல் மூன்று நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது என தயாரிப்பு தரப்பு மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

nenjam-marapathillai
nenjam-marapathillai

மேலும் செல்வராகவன் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் ஒரு பேட்டியில் கூட நெஞ்சம் மறப்பதில்லை 2 வந்தால் நன்றாக இருக்கும் என எஸ் ஜே சூர்யா ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News