செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஜய்யுடன் 15 வருட பகை.. நக்கலாக குத்தி காட்டிய நெப்போலியன்

பிரபுதேவா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த போக்கிரி திரைப்படத்தில் விஜய்,அசின்,பிரகாஷ்ராஜ்,நெப்போலியன் என பலரும் நடித்துள்ளனர். இதில் விஜய்யின் உயர் அதிகாரியாக நெப்போலியன் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் இவர்கள் இருவருக்கும் ஒரு சில பிரச்சினை ஏற்பட்டது.

போக்கிரி படத்தின் சூட்டிங் டைமில் விஜய் கேரவனில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நெப்போலியன் பிரண்ட்ஸ் அமெரிக்காவில் இருந்து வந்து விஜய்யுடன் ஒரு போட்டோ எடுக்க நினைத்தார்கள். அதனால் நெப்போலியன் அவர்களை அழைத்து கேரவனிற்கு அழைத்து சென்றார்.

Also read: ரோலக்ஸ் சூர்யாவைப் போல் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.. தளபதி 67-ல் முரட்டு மீசையுடன் வைரல் புகைப்படம்

அங்கே விஜயின் பாதுகாப்பாளராக இருந்தவர் நெப்போலியனை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து இருக்கிறார். ஆனால் அதையும் மீறி நெப்போலியன் உள்ளே போனதால் விஜய்க்கும் இவருக்கும் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. இதனால் கோபத்தில் இருந்த நெப்போலியன் இன்று வரை விஜய் இடம் பேசாமல் இருந்து வருகிறார்.

இவரின் கோபம் எந்தளவுக்கு இருக்கிறது என்றால் 15 வருடங்கள் ஆகியும் பேசாமல் இருப்பது நெப்போலியன் கோபத்தின் உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது. பின்பு இதைப்பற்றி ஒரு பேட்டியில் விஜய்யுடன் பேசுவீர்களா என்று கேட்டதற்கு நான் பேச தயார் அவர் பேச தயாரா என கேட்டுள்ளார்.

Also read: நெப்போலியனின் கண்ணீர் கதை.. இந்த மனுசனுக்குள்ள இவ்வளவு கஷ்டங்களா?

அது மட்டும் இல்லாமல் விஜய் அவரின் அப்பா அம்மா கூட பேசாமல் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன் அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் இந்த செய்தி அமெரிக்கா வரைக்கும் பரவி உள்ளது. இதைக் கேட்ட எனக்கு ரொம்பவும் வருத்தமாகவும் உள்ளது.

அதனால் முதலில் விஜய் அவங்க அப்பா அம்மா கூட பேச சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் பேசுறேன், நான் எப்பவும் பேச தயார் தான் என்று நக்கலாக கூறியுள்ளார். தற்பொழுது நெப்போலியன், விஜயை குறித்து தெரிவித்த விமர்சனம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: புரியாத புதிராக லோகேஷ் அளித்த ஷாக்கிங் பதில்..தளபதி 67 இல் விக்ரம் இருக்காரா?

Trending News