2019ஆம் ஆண்டு அஜித் வினோத் கூட்டணியில் முதன் முதலாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. படத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே தல அஜித் வந்தாலும் படம் 100 கோடி வசூலைத் தாண்டி வெற்றி பெற்றது. பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. பெண்களுக்கு ஆதரவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் பாலிவுட் படத்திலிருந்து சில பல மாற்றங்களை செய்து தான் தமிழ் படம் உருவானது. குறிப்பாக பாலிவுட்டில் சண்டைக் காட்சிகளே இருக்காது. ஆனால் தமிழில் அஜித் நடிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சண்டைக்காட்சியை உருவாக்கியிருந்தனர்.
தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் அஜித் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. தற்போது வரை 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தெலுங்குக்கும் தமிழுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கும். தமிழில் ஒரு சண்டைக்காட்சி இருந்தால் தெலுங்கில் நான்கு சண்டை காட்சிகள் இருக்கும். தமிழில் அஜீத்தின் பதட்டமான மேனரிசத்தை அப்படியே மாற்றி தெலுங்கில் பவன் கல்யாணுக்கு கோபப்படும் மேனரிசமாக மாற்றியுள்ளனர். மேலும் பவன் கல்யாண் தெலுங்கில் மாஸ் நடிகர் என்பதால் ஏகப்பட்ட மாஸ் காட்சிகளை வைத்துள்ளனர் என்பது டிரைலரிலேயே தெரிகிறது.

மேலும் தமிழில் தெரிந்த நடிகைகளையே தெலுங்கில் பயன்படுத்தியுள்ளனர். அதைப் பார்க்கையில் தமிழில் ஏன் சரியான நடிகைகளை பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. தெலுங்கில் நன்கு பரிச்சயமான நடிகைகளான அஞ்சலி, நிவேதா தாமஸ் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.

ஆனால் தமிழிலோ ஸ்ரத்தா தாஸ், பிக்பாஸ் அபிராமி போன்றோர் நடித்ததால் லைட்டாக பாலிவுட் வாடை வீசியது. தமிழில் கிளாசிக் படமாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் தெலுங்கில் மாஸ் படமாக மாறியுள்ளதே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

ட்ரைலரை பார்த்த தல அஜித் ரசிகர்கள் தெலுங்கு நேர்கொண்ட பார்வை ட்ரைலரையும் கொண்டாடி வருகின்றனர்.