பொங்கலுக்கு 11 படங்களுடன் நேசிப்பாயா படம் வெளி வருகிறது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது இதில் சிவகார்த்திகேயன் Chief Guest ஆக கலந்து கொண்டார்.
விஷ்ணுவரதன் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அழகான ஒரு காதல் காவியமாக இந்த படம் உருவாகி உள்ளது.
முரளியின் இளைய மகன் ஆகாஷ்க்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சரத்குமார், பிரபு, குஷ்பூ முக்கிய பிரபலங்களும் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேடையில் சிவகார்த்திகேயன் பேசுகையில் அடுத்து சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அதை தாண்டி அதர்வாவின் கதாபாத்திரத்திற்கு பயங்கர வரவேற்பு கிடைக்கும்.
அவர் கேரியரில் இந்த படம் மிக முக்கியமாக அமையும் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார். இந்த ஒரு வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் சினிமாவில் உச்சத்தை தொட்டு விடலாம் என்று கூறினார் SK.
இப்படி முரளியின் வாரிசுகளை ஒரே மேடையில் பாராட்டி அசத்தியுள்ளார் அடுத்த தளபதி. இதே மாதிரி விஜயகாந்தின் வாரிசை தூக்கி விடுகிறேன் என்று லாரன்ஸ் கூறியிருந்தார்.
அதே செண்டிமெண்ட் சிவகார்த்திகேயனுக்கு கனெக்ட் ஆகுமா? இதுபோன்று திக்கு திசை தெரியாமல் இருக்கும் நடிகர்களுக்கு மூத்த நடிகர் முன்வந்து உதவும் போது அவர்கள் இன்னும் ஒரு படி மேல் சென்று விடுகிறார்கள்.
இது ஒரு புறம் இருந்தாலும் தளபதியின் அடுத்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சிவகார்த்திகேயன் இது போன்ற சித்து வேலைகளை செய்துதான் ஆக வேண்டும்.