தியேட்டரில் சல்லி சல்லியாய் நொறுங்கிய இந்தியன் 2.. லைக்கா காலை வாரிவிட்ட நெட்ஃப்ளிக்ஸ், விலை போகாத சேனாபதி

Indian 2: ஷங்கர், கமல் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் பல வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகமாக உருவானது. மீண்டும் இந்தியன் தாத்தாவை காணப்போகும் ஆவலில் ரசிகர்கள் அதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிட்டத்தட்ட ஏழு வருட காத்திருப்பின் பலனாக இந்தியன் 2 சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் முதல் காட்சியிலேயே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்தது. அதை தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் ட்ரோல் செய்யப்பட்டது.

250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தற்போது வரை 150 கோடிகளை தான் வசூலித்திருக்கிறது. மேலும் ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு ஓரங்கட்ட பட்ட இந்தியன் 2 விரைவில் டிஜிட்டலுக்கும் வர இருக்கிறது.

ஆனால் அதில் தான் இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது படம் வெளி வருவதற்கு முன்பே லைக்கா இதன் டிஜிட்டல் உரிமையை 120 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் தளத்திடம் பேசி இருந்தது. ஆனால் படத்தின் ரிசல்ட் மோசமாக இருந்த நிலையில் தற்போது இந்த டீலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஓடிடியில் விலை போகாத இந்தியன் 2

அதாவது நெட்ஃபிளிக்ஸ் 120 கோடி எல்லாம் இந்த படத்துக்கு தர முடியாது அதில் பாதியை தான் கொடுப்போம் என கண்டிஷனாக கூறி விட்டார்களாம். ஒப்பந்தம் உறுதி செய்யப்படாத நிலையில் லைகாவுக்கு தற்போது வேறு எந்த வழியும் இல்லை.

இந்த டீலுக்கு அவர்கள் இறங்கித்தான் ஆக வேண்டும். இதனால் 50 கோடிகள் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் வந்த வரை லாபம் என லைக்கா இதற்கு சம்மதிப்பார்கள் என கூறுகின்றனர்.

இப்படித்தான் லால் சலாம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மொக்கை வாங்கியது. அந்த படத்தையும் லைக்காக தான் தயாரித்திருந்தார்கள். படம் தோல்வி அடைந்ததால் ஓடிடியிலும் விலை போகவில்லை.

அதனாலயே இப்போது வரை லால் சலாம் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அப்படி ஒரு நிலை இந்தியன் 2க்கு வருமா அல்லது அடிமாட்டு விலைக்கு விற்கப்படுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

அடிமாட்டு விலைக்கு போகும் இந்தியன் 2

Next Story

- Advertisement -