திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விக்னேஷ் சிவனால் வெறுப்படைந்த நெட்ப்ளிக்ஸ்.. கல்யாண வீடியோவிற்கு வைத்த ஆப்பு

நடிகை நயன்தாரா ,விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்தாண்டு 2022 ஜூன் மாதம் 9 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. சென்னை மகாபலிபுரத்தில் அமைந்துள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்து விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கழுத்தில் மஞ்சள் நிற கயிற்றிலான தாலியை கட்டினார். நயன்தாராவின் சிவப்பு நிற புடவையும், விகேஷ் சிவனின் பழுப்பு நிற பட்டு வேஷ்டி, சட்டையும் வேற லெவல் ட்ரெண்டானது. நயன்தாரா தனது திருமணத்தை பிரம்மாண்டமாக செய்த நிலையிலும் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார்.

Also Read: நான் சிங்கிளா ஜெயிப்பேன், நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. விக்னேஷும் வேண்டாம், ஏகேயும் வேண்டாம்

மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டுவர கூடாது என்றும் கேமரா உள்ளிட்ட சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த விஷயம் சர்ச்சையான நிலையில், கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் கொடுத்து பிரபல ஒடிடி தளமான நெட்பிலிக்ஸ் நிறுவனம் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை விலைப்பேசி வாங்கியது.

ஒரு பைசா கூட செலவில்லாமல் நயன்தாரா இந்த திருமணத்தை செய்து தனது திருமணத்தையே வியாபாரமாக மாற்றிய முதல் தென்னிந்திய நடிகை என்ற பெயரையும் பெற்றார். இவ்வளவு விஷயங்கள் பண்ணியும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகியும் இன்னும் இவர்களது திருமண வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இந்த திருமண வீடியோவை ரொம்ப ஸ்டைலிஷாக டாக்குமெண்ட்ரி படமாக இயக்க முற்பட்டார்.

Also Read: நயன்தாராவால் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த 4 படங்கள்.. எவ்வளவு தாஜா பண்ணியும் அஜித்திடம் பழிக்காத ஜம்பம்

அதற்கான வேலைகள் அப்படியே கிடப்பில் உள்ள நிலையில் இன்னும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் கூட நடைபெறாமல் உள்ளது. இதனால் அவ்வப்போது நெட்பிலிக்ஸ் நிறுவனமும் தலையிட்டு விடியோவை முடித்து கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளது. ஆனால் விக்னேஷ் சிவன் தாமதமாக்கி கொண்டு வருவதால் கடுப்பில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஒதுங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நயன்தாராவுக்கு திருமணமாகி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று தற்போது படங்களில் நடித்து வருகிறார். இன்னும் இவரது திருமண வீடியோ விக்னேஷ் சிவனால் வெளியாகாமல் உள்ளது. சொந்த திருமண வீடியோவுக்கே இவ்வளவு தாமதம் செய்து வரும் விக்னேஷ் சிவன், எப்படி படத்தை சீக்கிரமாக முடிக்க முடியும் என்ற இந்த காரணம் கூட அவர் ஏ.கே 62 படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Also Read: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல.. அஜித் படத்தில் விலகியதைப் பற்றி பெரிய கதையாக உருட்டும் விக்னேஷ் சிவன்

Trending News