நெட்ப்ளிக்ஸ் ஓ டி டி நிறுவனம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் படங்களுக்கு இப்பவே துண்டை விரித்து விலை பேசி வருகிறது. ஏற்கனவே பெரிய ஹீரோக்களை நம்பி அதிக விலைக்கு படங்கள் வாங்க மாட்டோம் என்று ஓ டி டி நிறுவனங்கள் எல்லாம் போர்க்கொடி தூக்கி வருகிறது.
தற்சமயம் ஹீரோக்களை ஏ பி சி என மூன்று கிரேடுகளில் பிரித்துள்ளது. ஒவ்வொரு கிரேடுக்கு தகுந்தாற்போல் படங்களை பிரித்து ரிலீஸ் செய்கிறது. அதேபோல் அதிக விலை கொடுத்து வாங்கவும் மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பெரிய ஹீரோக்கள் படங்கள் ஓ டி டி தளங்களில் ஓடுவதில்லை.
ஏற்கனவே அவர்கள் இந்தியன் 2 படத்தை நம்பி மோசம் போனார்கள். அதனால் இப்பொழுது இந்திய 3 பிசினஸ் மிகவும் டல்லடித்து வருகிறது. இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். இந்தப் படத்தோடு நிறைய படங்களையும் வாங்கி குவித்து வருகிறார்கள் நெட்ப்ளிக்ஸ்.
இந்தியன் 3 க்கு வந்த கஷ்டகாலம்
இப்பொழுது மாதவன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் டெஸ்ட் படத்தையும் நெட்லிஸ்தான் வாங்கி உள்ளது. புதுமுக இயக்குனர் சசிகாந்த் இந்த படத்தை இயக்குகிறார். இவர்களுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் 10 படங்களுக்கு இப்போது அக்ரிமெண்ட் போட்டு வைத்துள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். விடாமுயற்சி, வேட்டையன், ரிவால்வர் ரீட்டா, கங்குவா,காஞ்சுரிங் கண்ணப்பன் இரண்டாம் பாகம் என ஏகப்பட்ட படங்களை இப்பொழுதே வாங்க திட்டமிட்டு வருகின்றனர் இந்த நிறுவனம்.