வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மணி ஹீஸ்டை நம்பி கோடிகளை செலவழித்த நெட்பிளிக்ஸ்.. துணிவு படத்தின் ஓடிடி ரைட்ஸ் எவ்வளவு தெரியுமா?

அஜித் நடிப்பில் மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வினோத் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் 31ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது.

இதற்கான பிரமோஷன் இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் துணிவு படத்துடன் வாரிசு திரைப்படம் மோத இருப்பதும் மிகப்பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்ல போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவருக்கும் இருக்கிறது. அதனாலேயே பலரும் இந்த இரு படங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Also read: ரஜினியை பின்பற்றி வளர்ந்து வரும் விஜய், அஜித்.. வசமாக மாட்டிக் கொண்ட வாரிசு, துணிவு பட பிரமோஷன்

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ஓ டி டி பிசினஸ் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இப்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை பல கோடிக்கு வாங்கி வரும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் துணிவு திரைப்படத்தின் உரிமையையும் பல கோடி கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.

அந்த வகையில் துணிவு திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் 70 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் மணி ஹீஸ்ட் வெப் தொடரை போல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்று நெட்பிளிக்ஸ் ஆணித்தரமாக நம்புகிறதாம். அதனால் தான் இவ்வளவு கோடி கொடுத்து துணிவு திரைப்படத்தை வாங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

Also read: அஜித்தை பொருட்டாகவே மதிக்காத விஜய்யின் பேச்சு.. அமைதியாக கொடுக்கும் பதிலடி இதுதான்!

ஸ்பெயின் வெப் தொடரான மணி ஹீஸ்ட் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான அந்த தொடர் பல கோடி லாபம் அடைந்தது. அது மட்டுமல்லாமல் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட தொடர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அந்த அளவுக்கு இந்த தொடர் ஒரு வரலாற்றையே உருவாக்கி இருக்கிறது.

தற்போது அதேபோல் துணிவு திரைப்படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் நெட்பிளிக்ஸ் முந்திக்கொண்டு அந்தப் படத்தை கைப்பற்றி இருப்பதாக ஒரு பேச்சு இப்போது எழுந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் அப்டேட் மிகவும் தாமதமாகி வருகிறது என்று கூறப்பட்ட நிலையில் இப்போது வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டும் தெறிக்க விட்டுள்ளது.

Also read: விஜய், அஜித்தையும் தாண்டி ஒருபடி மேலே போன சூர்யா.. மொத்த கோடம்பாக்கத்துக்கும் கொடுத்த அதிர்ச்சி

Trending News