அஜித்தின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதியும் ,குட் பேட் அக்லி படம் ஏப்ரல் பத்தாம் தேதியும் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதான் இப்பொழுது netflix OTT தளத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த இரண்டு படங்களையும் பெரிய தொகை கொடுத்து வாங்கியது இவர்கள்தான்.
இந்த படங்களை மட்டுமல்லாமல் சூர்யா,கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் ரெட்ரோ படத்தையும் இவர்கள்தான் வாங்கி இருக்கிறார்கள். இந்த படம் அஜித் பிறந்தநாள் அன்று மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த தேதியும் நெட்ப்ளிக்ஸ்க்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
பிப்ரவரி 6 ரிலீசாகும் விடா முயற்சி படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி தங்களது ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பொதுவாக ஒரு படம் 40 நாட்கள் தங்களது தளத்தில் ஸ்ட்ரீம் ஆனால் மட்டுமே இவர்கள் லாபம் பார்க்க முடியும்.
விடாமுயற்சி, ரெட்ரோ, குட் பேட் அக்லி இந்த மூன்று படங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு இடைவெளி கொடுத்தால் தான் அவர்களால் லாபம் பார்க்க முடியும் ஆனால் இந்த படங்கள் அடுத்தடுத்து வருவதால் அவர்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்காது. இதனால் அவர்கள் பெரிய திட்டம் போட்டு வருகிறார்கள்.
ஏதாவது ஒரு படம் அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்து தள்ளி ரிலீஸ் ஆனால் பிழைத்து விடுவார்கள். இதனால் குட் பேட் அக்லீ படத்தின் ரிலீஸ் தேதியை கொஞ்சம் தள்ளி வைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்திலும் நியாயம் இருப்பதால் இந்த படம் அந்த நாளில் ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான்.