பிரபல நடிகர்களின் திரைப்படங்களை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் தற்பொழுது முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிரபல நடிகர்களின் பட அறிவிப்பு வந்தாலே போதும் இந்த நிறுவனம் உடனடியாக களமிறங்கி விடுகிறது.
அந்த வகையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் மெகா பட்ஜெட் திரைப்படங்களில் ஆரம்பித்து இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் படங்கள் வரை இந்த நிறுவனம் கைப்பற்றி வருகிறது. அதில் லேட்டஸ்டாக தற்போது விக்ரம் மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் உரிமையை இந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ரஞ்சித் விக்ரமை வைத்து சியான் 61 திரைப்படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். மெகா பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தை பற்றி பல செய்திகள் வெளிவந்து சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
மேலும் கே ஜி எஃப் திரைப்படத்தில் சொல்லப்படாத பல உண்மை நிகழ்வுகளையும் இந்த படம் காட்ட இருக்கிறது. இதனாலேயே இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதை நன்றாக தெரிந்து கொண்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.
Also read:சோழர்களை பெருமைப்படுத்திய விக்ரம்.. கட்டியணைத்து பாராட்டிய பொன்னியின் செல்வன்
இதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தின் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மற்ற ஓடிடி நிறுவனங்களும் நெட்பிளிக்ஸின் இந்த அசுர வேக பாய்ச்சலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்குவதில் போட்டி போட்டு வருகிறது.
இதனால் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்கிறது. அந்த வகையில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடப்பட்டது.
Also read:விக்ரமால் நடிக்க முடியாமல் திணறிய விக்ரம் பிரபு.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்