சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஓட்ட வாய் நாராயணா! வசமா சிக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. குடுமியை பிடித்து ஆட்டும் நெட்பிலிக்ஸ்

Netflix- Aishwarya Rajinikanth: தவளை தன் வாயால் கெட்டுப் போகும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது ரஜினியின் மூத்த பொண்ணு ஐஸ்வர்யாவுக்கு தான் சரியாக இருக்கும்.

ரஜினி பெயரை காப்பாத்துறேன்னு தயவு செஞ்சு நீங்க சினிமாவுக்கு வராதீங்கன்னு அவருடைய பெண்களை ரஜினி ரசிகர்கள் கெஞ்சி கேட்டுக் கொள்ளும் நிலைமையில் தான் இப்போது இருக்கிறது. இதற்கு காரணம் அப்பா பெயரை நாங்க வச்சுக்கிட்டு சினிமால வாய்ப்பு வாங்க மாட்டோம்னு சொல்றாங்க.

ஆனா முழுக்க முழுக்க ரஜினி பெயரை வைத்து தான் இவர்கள் பொழப்பை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அப்பா சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்து நிறையவே இருக்கு. இத வேற ஏதாவது ஒரு துறையில் போட்டு லாபம் பார்த்து வாழலாம்.

ஆனால் தேவையில்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து தலைவரை மேலும் மேலும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். லால் சலாம் பட பிரச்சனை எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஒண்ணுமே இல்லாத கதையை, மொத்தமாய் சூப்பர் ஸ்டார் தாங்கி பிடித்து நடித்துக் கொடுத்தார்.

சரி தலைவருக்காக பார்ப்போம் என்று ஒரு ரெண்டு, மூணு நாள் தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டர் பக்கம் போனார்கள். அத்தோடு படம் பார்க்க ஆள் இல்லாமல் லால் சலாம் திரையிடப்பட்ட திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அதே சமயத்தில் ரிலீஸ் ஆன லவ்வர் படம் வசூலை வாரிக் குவித்து வெற்றி பெற்றது. இது போதாது என்று சேனலுக்கு சேனல் உக்காந்து பேட்டி கொடுக்கிறேன் என்று ஐஸ்வர்யா தேவையில்லாமல் நிறைய பேச்சை பேசி விட்டார்.

தன்னுடைய அறிமுக படமான 3 படத்தின் தோல்விக்கு ஒய் திஸ் கொலைவெறி பாடல் தான் காரணம் என ஒரே போடாக போட்டார். அந்தப் படத்தில் இருந்த ஒரே உருப்படியான விஷயம் அதுதான் என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அவரை கழுவி ஊற்றினார்கள்.

இது போதாது என்று லால் சலாம் படம் தோல்விக்கு அவர் சொன்ன காரணம் தான் எல்லோரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது. அதாவது 21 நாள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட 2 வீடியோ புட்டேஜ்.

மிஸ் ஆகிவிட்டதாகவும், இருந்த தரவுகளை வைத்து படத்தை அட்ஜஸ்ட் செய்ததால் தான் திரைகதையில் தவறு நடந்து விட்டதாகவும் சொன்னார். இதை சொல்லாம இருந்தா கூட ஏதோ ஒரு அளவுக்கு இவர் தலை தப்பி இருக்கும்.

ஆனா சின்ன பிள்ளை போல் அவன் அடிச்சிட்டான், இவன் கிள்ளிட்டான் என கம்ப்ளைன்ட் பண்ணி மொத்தமாக வறுத்தெடுக்கப்பட்டார். சரி தியேட்டர் பக்கம் தான் வசூல் இல்லை, OTT பக்கம் போகலாம் என முடிவு எடுத்தது படக்குழு.

குடுமியை பிடித்து ஆட்டும் நெட்பிலிக்ஸ்

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு படத்தை வாங்க தயாராகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு ஒரு பெரிய செக்கை வைத்து விட்டார்கள்.

மிஸ்ஸான வீடியோ புட்டேஜை எப்படியாவது எடுத்துக் கொடுங்கள், படத்தை வாங்கிக் கொள்கிறோம் என சொல்லி விட்டார்களாம். ஒரு படம் எடுக்கும் பொழுது இது போன்ற விஷயங்கள் எதுவும் நடக்காமல் இருக்க நிறைய டெக்னாலஜி வந்து விட்டது.

தரவுகளை சேர்த்து வைக்க, டெலிட் ஆன தரவுகளை மீட்டெடுக்க என ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு சாக்கு சொல்லி வசமாக சிக்கி விட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இப்போ லால் சலாம் படத்தை ஓடிடி தளத்தில் கூட ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு பெரிய பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறார். இதைத்தான் யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் என்று சொல்வார்கள் போல.

Trending News