நெட் ஃபிளிக்ஸின் நீண்ட நாள் ஆசை.. எல்லாமே விஜய் சேதுபதியின் கையில தான் இருக்கு

Netflix’s long-term desire: தற்போது இருக்கும் டாப் ஓடிடி தளங்களில் நெட்ஃபிளிக்ஸும் ஒன்று. முன்னணி நடிகர்களின் படங்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி தங்களது ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. இதனுடைய பல வருட கனவு இப்போது நிஜமாகி உள்ளது.

நெட் ஃபிளிக்ஸ் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி போட்டு படம் எடுக்கிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து, அதை நெட் ஃபிளிக்ஸிடம் கொடுக்கும்படி ஒரு அக்ரிமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

எல்லாருக்குமே ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கோலிவுட்டின் டாப் சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் சமீப காலமாக படங்களை தயாரிப்பதில் இருந்து விலகி, மற்ற பணிகளில் ஈடுபட்டது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி உள்ளது.

Also Read: 2023 ல் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க செய்த 6 இயக்குனர்கள்.. சித்தா மூலம் சிந்திக்க வைத்த இயக்குனர்

நெட் ஃபிளிக்ஸின் நீண்ட நாள் ஆசை

சமீபத்தில் இவர்களுடைய தயாரிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி கவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் புதிய படத்தினை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப் போகிறது. அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹேக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களமாக உருவாகிறது.

இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு விஜய் சேதுபதி ஓகே சொல்வாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் நிறைய பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் மக்கள் செல்வன் கால் சீட் பிரச்சனைகளும் மாட்டிக் கொள்கிறார். இருந்தாலும் இந்த கேரக்டருக்கு விஜய் சேதுபதி தான் என்று அஜய் ஞானமுத்து ஸ்ட்ராங்காக சொல்வதால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இப்போது கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், பாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் அடித்தது போல் ஏவிஎம் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை அவர் பயன்படுத்திக் கொள்ள தான் பார்ப்பார்.

Also Read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. நயன்தாராவுடன் மீண்டும் மோத வரும் பார்க்கிங்